ஹெல்மெட்டுகளை வைத்து பெனால்டி வாங்கிய பங்களாதேஷ் – வீடியோ இணைப்பு!

0
521
Ind vs Ban

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது . இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 278 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்கள் உடன் களத்தில் இருந்தார் .

இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 86 ரண்கள் அடித்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இபாதத் உசேன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து அஸ்வின் உடன் இணைந்த யாதவ் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார் . இருவரும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர் . இந்நிலையில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது .

- Advertisement -

ஆட்டத்தின் 112 வது ஓவரில் தைஜூல் வீசிய பந்தை அஸ்வின் கட் செய்ய முயன்ற போது அது எட்ஜாக மாறி முதல் ஸ்லீப்பிங் திசையில் சென்றது .அந்தப் பந்தை தடுத்த வீரர் அதை விக்கெட் கீப்பருக்கு வீச முயன்ற போது அது விக்கெட் கீப்பருக்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டில்பட்டது .

இதனால் இந்திய அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி மூலம் கிடைத்துள்ளது .
ஹெல்மெட்டில் படுவதால் பெனால்டி ரன்கள் தரப்படும் என்பது விதி, இதே போல் கழட்டி வீசும் கீப்பர் கையுறையிலும் பட்டாலும் பெனால்டி ரன் தரப்படும்…

இது போன்ற சுவாரசியமான சம்பவங்கள் கிரிக்கெட்டில் மிகவும் அரிதாகவே நடக்கக் கூடியவை . சில நேரங்களில் ஃபீல்டர்களின் கவனகுறைவாள் இதுபோன்று எதிரணியினருக்கு கொடுக்கப்படும் பெனால்டி ரன்கள் போட்டியை கூட மாற்றுவதாக அமையும் . இந்த சுவாரசியமான சம்பவத்தின் காணொளி ஆனது கீழே இணைக்கப்பட்டுள்ளது .

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு டெஸ்ட் போட்டி ஆகும் . இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள உதவும் .

தேநீர் இடைவெளிக்குப் பின்பு தனது ஆட்டத்தை தொடங்கிய பங்களாதேஷ் அணி தற்பொழுது 97 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்துள்ளது .முஷ்பிகுர் ரஹீம் 23 ரன்கள்டனும் மெஹந்தி ஹசன் 0 ரண்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் தரப்பில் முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர் .