இழுத்துப்பிடித்த ஆட்டத்தை கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட இந்தியா… நூலிழையில் தோல்வி!

0
437

இந்திய அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பங்களாதேஷ் அணி.

வங்கதேசம் சென்று ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியை டாக்கா மைதானத்தில் விளையடியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

துவக்க வீரர் தவான் ஏழு ரன்களுக்கும், விராட் கோலி ஒன்பது ரன்களுக்கும் ஆட்டங்கள் இழந்தனர். மற்றொரு துவக்க வீரர் ரோகித் சர்மா சிறிது நேரம் நிலைத்த ஆடி 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்திய அணி மிகவும் தடுமாறியது.

92 ரன்களுக்கு நான்கு கட்டுகளை இழந்திருந்த போது வாஷிங்டன் சுந்தர் மற்றும கேஎல் ராகுல் இருவரும் ஜோடி சேர்த்து 60 ரன்கள் அடித்திருந்தனர். பின்னர் வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ஆல்ரவுண்டர்கள் சபாஷ் அகமது, தாக்கூர் மற்றும் தீபக் சகர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இறுதிவரை போராடிய கேஎல் ராகுல் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க 41. 2 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி.

அடுத்து களம் இறங்கிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர் நஜ்முல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். கேப்டன் லிட்டன் தாஸ் நிலைத்து ஆடி 41 ரன்கள் சேர்த்தார். சாகிப் அல் ஹசன் 29 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

அதிக அளவில் ரன்களை விட்டுக் கொடுக்காத இந்திய அணி 95 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது. பங்களாதேஷ் அணி 128 ரன்களை எடுத்திருந்தபோது, ஐந்தாவது விக்கெட் இழந்தது. அதன்பின் ஓரிரு ரன்கள் இடைவெளியில் வரிசையாக 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

நாற்பதாவது ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த வங்கதேச அணி வெற்றி பெற இன்னும் 51 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணி மீதமிருக்கும் விக்கெட்டை கைப்பற்றி போட்டியை வெல்லும் என எதிர்பார்த்த போது, முஸ்தபிஷர் ரஹ்மான் மற்றும் மெகதி ஹாசன் இருவரும் ஜோடி சேர்த்து இந்திய அணையின் நம்பிக்கையை தகர்த்து வெற்றி பெற்றனர்.

இதில் மெகதி ஹாசன் 38 ரன்களும் முஸ்தபிஷர் ரஹ்மான் 10 ரன்களும் அடித்திருந்தனர். சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குலதீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கடைசியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்றது