பங்களாதேஷ் வீரர் வரலாற்று சாதனை சதம்; தடுமாறும் இந்திய அணி!

0
1049
Ind vs Ban

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது இதில் முதல் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தது .

இதனை அடுத்து களம் இறங்கிய பங்களாதேஷ் வீரர்கள் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர் . ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 69 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது . அந்த நேரத்தில் அனுபவ வீரரான மஹ்முதுல்லாஹ் ஜோடி சேர்ந்தார் முதல் போட்டியின் நாயகன் மெஹதி ஹசன் .

- Advertisement -

இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டு வலுவான இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர் . அதிரடி ஆட்டத்துடன் தடுப்பாட்டத்தையும் கலந்து ஆடிய மெஹந்தி ஹசன் தனது 50 ரண்களை நிறைவு செய்தார் . இவருக்கு துணையாக ஆடிய மஹ்முதுல்லாஹ்வும் அவருடைய 50 ரண்களை எட்டினார் .. அதன்பின் அதிரடியாக ஆட முயன்ற மஹ்முதுல்லாஹ் உம்ரான் மாலிக்கின் வேகத்தில் 77 ரன்களை எடுத்து இருந்து நிலையில் கே எல் ராகுல் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் .

மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மெஹந்தி ஹசன் ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவிக்க பங்களாதேஷ் அணியின் எண்ணிக்கையும் உயர்ந்தது . பந்து வீச்சாளர்களை ஒரு முனையில் வைத்துக்கொண்டு அதிரடியாக ஆடிய மெஹதி ஹசன் 49 வது ஓவரின் முடிவில் ஒரு நாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார் .

ஆட்டத்தின் இறுதி ஓவரில் அவர் ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்ய 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சர்துல் தாக்கூர் வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அதிரடியாக விளாசி 97 ரன்களை எட்டினார் . ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்துகளில் அவருக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 49 ஓவரின் ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டத்தின் இறுதிப்பந்தில் தேவையான ஒரு ரன் எடுத்து தனது ஒருநாள் கிரிக்கெட் கேரியரின் முதல் சதத்தை பதிவு செய்தார்
மெஹதி ஹசன். 83 பந்துகளில் 100 ரன்களை எட்டினார் மெஹதி ஹசன் இதில் நான்கு சிக்ஸர்களும் எட்டு பவுண்டரிகளும் அடக்கம் .. ஒருநாள் போட்டிகளில் இது மிகச்சிறந்த ஒரு சதமாக பார்க்கப்படுகிறது இவரது அபாரமான ஆட்டத்தினால் வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை குவித்தது .

- Advertisement -

எட்டாவது வீரராக களம் இறங்கி சதம் அடிப்பது என்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும் . இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வீரர் சிம்ரன் ஜீத் சிங் (எ) சிம்மி சிங் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 346 ரன்கள் எடுத்தது . 347 என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கி அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பொழுது கேம்பருடன் ஜோடி சேர்ந்த சிம்மி சிங் அதிரடியாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார் . கேம்பர் அரை சதத்துடன் வெளியேறிய நிலையில் சிம்மி சிங் தொடர்ந்து ஆடி 91 பந்துகளில் 100 ரன்களை எட்டினார் இதில் 14 பவுண்டரிகள் அடங்கும் . இறுதியாக அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் மட்டுமே பெற்றது . சிம்மி சிங் 100 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார் . சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் எட்டாவதாக களம் இறங்கிய வீரர் சதம் அடித்தது அதுவே முதல் முறையாகும் .