கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“25 வருஷமா பங்களாதேஷ் விளையாடி நோ யூஸ்.. ஆப்கானிஸ்தான் அசத்திட்டிங்க!” – சேவாக் அதிரடி ட்வீட்!

ஆசியக் கண்டத்தில் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அதே நேரத்தில் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி அடையவும் வைத்திருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் படுதோல்வியை ஆப்கானிஸ்தான் அணி சந்தித்தது. இந்த உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியே மற்றவர்களை பயமுறுத்தும் அணியாக இருக்கும் என்று தோன்றியது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணி அதற்குப் பிறகு, பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தை கொண்ட சிறிய மைதானமான டெல்லியில் வைத்து, உலக சாம்பியன் இங்கிலாந்தில் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இதற்கு அடுத்து சிறந்த கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நாங்கள் யாரையும் அசந்தர்ப்பமாக வீழ்த்தவில்லை என்று காட்டியது. இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் அணி பற்றியான பார்வையை ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பையில் மாற்றியது.

- Advertisement -

இதற்கு அடுத்து இன்று பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இலங்கை அணியை 241 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, அந்த இலக்கை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 45 ஓவர்களில் எட்டி அனாயசமாக வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணி என்ன செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்களோ அதைவிட அதிகமாக ஆப்கானிஸ்தான் அணி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான அணிக்கு எதிராக பெற்ற வெற்றியைத் தவிர வேறு எந்த வெற்றியையும் பெறவில்லை. கடைசியாக நெதர்லாந்து அணியிடமும் தோற்றது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்து ட்வீட் வெளியிட்டுள்ள ஷேவாக் அதில் கூறும்பொழுது “ஆஹா ஆப்கானிஸ்தான் என்ன ஒரு அற்புதமான செயல் திறன். ஆப்கானிஸ்தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் நிர்வாகம் வெளிப்படுத்திய ஸ்பிரிட் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

பங்களாதேஷ் 25 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இருக்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி குறுகிய காலத்தில் பெரிய அணிகளை வீழ்த்தியது போல அவர்கள் செய்தது கிடையாது. ஆப்கானிஸ்தான் குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக மேம்பட்ட அணியாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -
Published by