இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு புறப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளையும் வெல்வோம் என பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரங்களில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் வைத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளையும் வென்று வரலாற்று வெற்றியை பங்களாதேஷ் அணி பதிவு செய்தது. தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்ததை இந்திய அணிக்கு எதிராகவும் செய்ய முடியும் என பங்களாதேஷ் அணி கருதுகிறது.
இரண்டு போட்டிகளையும் வெல்வோம்
இது குறித்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறும்பொழுது “நிச்சயமாக எங்களுக்கு இது ஒரு நல்ல சவாலான தொடராக இருக்கும். ஒரு பெரிய அணிக்கு எதிரான ஒரு தொடரின் வெற்றிக்குப் பிறகு அணியின் மீது மக்களுக்கும், அணிக்குள்ளும் பெரிய அளவில் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு தொடரும் எங்களுக்கு வாய்ப்புதான்”
“இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறவே நாங்கள் விளையாடுவோம். அதற்கு எங்களுடைய செயல்முறை சரியாக இருக்க வேண்டும். எங்களுடைய வேலையை சரியாக செய்வதை எங்களுடைய நோக்கமாக இருக்கும். நமது வேலையை சரியாக செய்தால் நமக்கு சரியான பலன்கள் கிடைக்கும்”
ஐந்து நாட்களுக்கு திட்டம்
மேலும் இது குறித்து அவர் கூறும் பொழுது “ரேங்கிங் எடுத்துக் கொண்டால் எங்களுக்கு முன்னே அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சமீபத்தில் சிறப்பாக விளையாடி வருகிறோம். நாங்கள் ஒரு நல்ல தொடரை பெற்று இருந்தோம். நாங்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் சரியாக விளையாட வேண்டும். ஐந்தாவது நாளின் கடைசி செஷனில் போட்டி முடிவுக்கு வருகிறது. அந்த நேரத்தில் எந்த அணி சிறப்பாக இருக்குமோ அந்த அணி வெல்லும்”
இதையும் படிங்க : 8 ஃபோர்ஸ் 9 சிக்ஸ்.. டி காக் புது ரெக்கார்ட்.. டி20 WC பைனல் நடந்த அதே மைதானம்.. சிபிஎல் 2024
“பொதுவாக வேகப்பந்து வீச்சில் இந்திய அணியின் அனுபவம் எங்களை விட சிறப்பாக இருக்கிறது. சுழல் பந்துவீச்சில் நாங்கள் சமமாகவே இருக்கிறோம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து அணியாக விளையாடும் பொழுது எவ்வளவு பெரிய அனுபவம் வாய்ந்த அணியையும் வீழ்த்த முடியும். எனவே நாங்கள் நம்பிக்கை உடன் இந்த தொடரை எதிர்கொள்கிறோம்” என்று கூறி இருக்கிறார்