“இந்த விஷயத்தில் பெங்களூர் அணி மற்ற அணிகளை விட அபாயமானதாக இருக்கிறது” – இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர்!

0
275

.

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து தொடங்கி நடைபெற இருக்கிறது 16 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது.

- Advertisement -

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தின் மூலம் அணிகளுக்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த முறையும் சென்னை அல்லது மும்பை அணியின் பக்கமே ரசிகர்களின் நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் நடந்து முடிந்த 15 சீசன்களில் மும்பை ஐந்து முறையும் சென்னை நான்கு முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை ராசி இல்லா ராஜா என்றால் அது ஆர்.சி.பி அணி தான்.. இதுவரை அந்த அணியும் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட அவர்களால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடர்களின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற பெங்களூர் கோப்பையை கைப்பற்றாமல் இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு தொடர்களிலும் தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது ஆர்.சி.பி. இந்த முறை நிச்சயமாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் அந்த அணி களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியின் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி கிரிக்கெட் வல்லுனர்கள் அலசி வருகின்றனர். அந்த வகையில் பெங்களூர் அணியின் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி பேசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

- Advertisement -

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசியிருக்கும் மஞ்ச்ரேக்கர் இந்த வருட ஐபிஎல் இல் மிகச் சிறந்த பந்துவீச்சை கொண்ட அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது பற்றி விரிவாக பேசியிருக்கும் அவர் ஆர் சி பி அணியில் காயம் காரணமாக ஹேசல் வுட் காயம் அடைந்து இருந்தாலும் அவர்களிடம் திறமையான வேகம் வந்து வீச்சாளர்களான முகம்மது சிராஜ் மற்றும் டாப்லி ஆகிய பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். மேலும் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய ஹர்ஷால் பட்டேல் ஆர் சி பிரியாணி யில் தான் இருக்கிறார். சுழற் பந்துவீச்சுக்கு உலகின் நம்பர் ஒன் டி20 பௌலரான வனிந்து ஹசரங்கா உள்ளார். மேலும் அவருக்கு துணையாக பந்து வீச சபாஷ் அஹமத் இருக்கின்றார்.

இவர்களை தவிர்த்து பேட்டிங்கால் ரவுண்டரான மேக்ஸ்வெல் அவ்வப்போது பந்து வீசுவார். எனவே ஒரு அணியாக எடுத்துப் பார்க்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சு ஆபத்து நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவர்களின் பந்துவீச்சு இந்த சீசனில் மிகப்பெரிய ஒரு திருப்புனையாக அமையும் என தான் நினைப்பதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் மஞ்சரேக்கர்.

.