டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்… விக்கெட்டுகள் இழந்து பரிதாப நிலையில் இந்தியா!

0
212

முதல் நாள் உணவு இடைவேளையின்போது 85 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது இந்திய அணி.

வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி சிட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.

- Advertisement -

ரோகித் சர்மா காயம் காரணமாக அணியில் இல்லாததால் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார். துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.

நிதானமாக ஆடிவந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தபோது, தாஜுல் இஸ்லாம் பந்தில் சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டம் இருந்தார். அடுத்த சில பந்துகளிலேயே கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்களுக்கு கலீத் அஹ்மது பந்தில் அவுட் ஆனார்.

வங்கதேசம் அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் சதம் விலாசி சிறந்த பார்மில் இருந்த விராட் கோலி, அதை டெஸ்ட் போட்டிகளில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து தாஜுல் இஸ்லாம் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசம் அணி வலுவான நிலையை பெற்றது. 45/3 என இந்திய அணி தடுமாறி வந்த போது, துணை கேப்டன் சித்தேஷ்வர் புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வருகின்றனர்.

முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாக, புஜாரா 12 ரன்கள், ரிஷப் பண்ட் 29 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்கு பின்பு புஜாரா மற்றும் ரிஷப் பன்ட் இருவரின் பாட்னர்ஷிப் நீடித்து இந்திய அணி வலுவான நிலையை அடையுமா? பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி தனது தாக்குதலை தொடருமா? என்பதை பார்ப்போம்.