பேட்ஸ்மேன் ஹெல்மெட்டில் சிக்கிய பந்து ; வீடியோ இணைப்பு; பாகிஸ்தான் இங்கிலாந்து ஆட்டத்தில் பரபரப்பு!

0
260
Brook

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது.
இந்தத் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்று இருக்க, இரண்டாவது போட்டியில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு விக்கெட்டுகளை கூட தராமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டு ஆட்டங்கள் தொடரில் முடிந்திருக்க மூன்றாவது ஆட்டம் நேற்று கராச்சி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் அணி பழைய அணியாகவே தொடர்ந்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் வில் ஜாக்ஸ் 22 பந்தில் 40 ரன்கள் எடுத்து வெளியேற, அதற்கடுத்து ஜோடி சேர்ந்த பென் டெக்கட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை நொறுக்கி தள்ளிவிட்டார்கள். இருவருமே நேற்று தங்களது முதல் சர்வதேச அரைசதத்தை அடித்தார்கள். குறிப்பாக இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக்கின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காது அவர் 35 பந்துகளில் 81 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடக்கம். முடிவில் இங்கிலாந்து அணி 221 ரன்களை குவித்தது.

ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடிக் கொண்டு இருக்கையில், பாகிஸ்தான் அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் வீசிய பவுன்சர் பந்து ஒன்றை அவர் அடிக்க முயற்சி செய்ய, அந்தப் பந்து அவரை ஏமாற்றி ஹெல்மட்டை தாக்கி, ஹெல்மெட்டின் முன் பாதுகாப்பு வளைய கம்பிகளுக்கு இடையில் நுழைந்து சிக்கியது. மிகவும் ஆபத்தான முறையில் தாக்கிய பந்து ஹெல்மெட்லேயே தங்கியது வியப்பாக இருந்தது. அடுத்து பாகிஸ்தான் வீரர்கள் அவரை பரிசோதிக்க, பயப்படும்படியாக எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பாபர் மற்றும் ரிஸ்வான் சீக்கிரத்தில் வெளியேற பாகிஸ்தான் அணி சீட்டுக்கட்டு போல் சரிந்தது. அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷான் மசூத் மட்டும் தாக்குப்பிடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்தார். தற்போது 7 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -