இந்திய ரசிகர்களுக்கு சோகமான செய்தி; 12 மணிக்குள் இது நடக்க வேண்டுமாம்!

0
13685

இந்திய நேரப்படி 2வது ஒருநாள் போட்டி 12 மணிக்குள் துவங்க வேண்டும். இல்லையென்றால் என்ன நடக்குமென்று ஐசிசி விதிமுறைகள் கூறுவதை காண்போம்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதனையடுத்து இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் தவான் இருவரும் முதல் ஒருநாள் போட்டியில் பெற்ற ஃபார்மை மீண்டும் வெளிக்காட்டுவதற்கு தொடர்ந்து முயற்சித்தனர்.

4.5 ஓவர்களில் இந்திய அணி 22 ரன்கள் எடுத்திருந்தது. கில் 19 ரன்களுடனும் தவான் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது திடீரென போட்டியில் மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே தடைப்பட்டது.

ஹாமில்டன் மைதானத்தில் வானிலை மிகவும் மோசமாக இருக்கிறது. திடீரென மழை நின்று விடுகிறது. அதனடிப்படையில் விளையாட பிளேயர்கள் உள்ளே வந்தால், மீண்டும் தூறல் வரத் துவங்கிவிடுகிறது.

இப்படியாக தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்து வருவதால், போட்டி துவங்கிய சில ஓவர்களிலேயே நிற்கிறது. ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்குள் துவங்கிவிட்டால் 20 ஓவர்கள் போட்டியாக நடத்தப்படும். 12.35 மணிக்குள் போட்டி துவங்கவில்லை என்றால் ஆட்டம் ரத்து ஆனதாக அறிவிக்கப்படும் என்று ஐசிசி விதிமுறைகள் கூறுகின்றன.

ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் இத்தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இன்றைய போட்டி நடைபெறவில்லை என்றால், மூன்றாவது ஒருநாள் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் இந்திய அணி, வெற்றி பெற்றாலும் தொடரை சமன் செய்யவே முடியும். இது உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிபட்டியலில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக இந்திய ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.