“இந்திய ரசிகர்களே சோகமான செய்தி” இந்தியா-நியூசிலாந்து போட்டியில் சிக்கல்!

0
44213

இந்தியா-நியூசிலாந்து அணிகள் முதல் டி20 போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

டி20 உலக கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா, ஒரு நாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் இருவரும் கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகின்றனர்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நவம்பர் 18ஆம் தேதி மதியம் 12 மணியளவில் துவங்கவிருந்தது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

மோசமான வானிலை!

இந்திய நேரப்படி 11:30 மணிக்கு டாஸ் போடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்தன. மைதானம் தொடர்ந்து ஈரப்பதத்துடன் காணப்பட்டதால், டாஸ் சிறிது நேரம் ஒத்தி வைக்கலாம் என நடுவர்கள் முடிவு செய்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு மழை பெய்ய துவங்கியது. தற்போது வரை மழையின் தீவிரம் அதிகமாக இருப்பதால் டாஸ் தடைப்பட்டு இருக்கிறது.

ஐசிசி விதிமுறை!

இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்குள் மழை நின்று ஆட்டம் துவங்கினால், போட்டி 16 ஓவர்கள் ஆட்டமாக மாற்றப்பட உள்ளது. போட்டி ஒரு மணி முதல் 2 மணிக்குள் துவங்கும் பட்சத்தில் ஆட்டம் தலா 12 ஓவர்கள் போட்டியாக மாற்றப்படும் என தற்போது வரை அறிவிப்பு வந்திருக்கிறது.

இரண்டு மணிக்குள் போட்டியை துவங்க முடியவில்லை என்றால் இன்றைய ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்படும் என்றும் விதிமுறைப்படி கூறப்பட்டிருக்கிறது.

நேருக்கு நேர்!

கடந்த முறை நியூசிலாந்து சென்று டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் அனைத்தையும் கைப்பற்றி 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.