பாபர் வில்லியம்சன் ஸ்மித் யாருக்கும் விராட் கோலியின் திறமை கிடையாது – கம்பீர் கூறும் காரணம்!

0
5881
Gambhir

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியின் 34 ஆவது பிறந்தநாள் இன்று. இந்த பிறந்தநாள் அவருக்கு மிகவும் வித்தியாசமான ஒன்றாகவே அமைந்திருக்கும்!

காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பேட்டிங் ஃபார்மில் கொஞ்சம் சரிவை கண்டிருந்த அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வந்தது!

- Advertisement -

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு பெற்றுக் கொண்டு ஒரு மாத காலம் அணி மற்றும் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்து ஆசியக் கோப்பை திரும்பினார் விராட் கோலி.

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் சற்று சுமாராக ஆரம்பித்த விராட் கோலி, ஹாங்காங் அணியுடன் ஒரு அரை சதம் அடித்து சற்று எழுந்தார். இதற்கு அடுத்து அந்தத் தொடரின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி உடன் அதிரடியாக விளையாடி சதம் அடித்து, மூன்றாண்டு காலம் நழுவிய சதத்தை கொண்டு வந்தார்.

இதற்கு அடுத்து இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் அவருடைய வழக்கமான புத்திசாலித்தனமான பேட்டிங் வெளிப்பட தொடங்கியது.

- Advertisement -

இதற்கெல்லாம் மிக உச்சமாக நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் அவர் ஆடிய ஆட்டம் அமைந்தது. இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்ற விராட் கோலி ஜெயிக்கவே முடியாதென்ற ஆட்டத்தில் இந்திய அணியை வெல்ல வைத்து, தான் மீண்டும் மட்டும் வரவில்லை, மிகச் சிறப்பாக திரும்பி வந்திருக்கிறேன் என்று உணர்த்தினார்.

தற்பொழுது விராட் கோலியின் பேட்டிங் பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ” விராட் கோலியின் பேட்டிங் அணுகு முறையை பார்க்கும் பொழுது அவர் கடைசி பத்து ஓவரில் மிகச் சிறந்த அதிரடி ஆட்டக்காரராக விளையாடுகிறார், அதே சமயத்தில் முதல் 10 ஓவர்களில் அணி என்ன நிலைமையில் இருக்கிறதோ அதற்கேற்றவாறு ஆங்கர் ரோல் செய்கிறார். இது பாபர் செய்வது போல் கிடையாது. விராட் கோலி செய்து கொண்டிருப்பது ஆங்கர் ரோலுக்கும் மேலே. பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணி கொஞ்சம் சிரமத்தில் இருந்த பொழுது கே எல் ராகுலுடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்தார், பின்பு அதையே சூரியகுமார் யாதவுடன் செய்தார். சூர்யா ஆட்டம் இழந்த பின்பு அந்த ஆட்டத்தில் உடனே கதாநாயகனாக விராட் கோலி மாறினார்” என்று கூறியுள்ளார்!

தொடர்ந்து பேசிய கவுதம் கம்பீர்
” திறமை இருந்தால் மட்டுமே இது முடியும். ஆங்கர் ரோலிலும் அக்ரசிவ் ரோலிலும் இருக்கும் திறன் மிக குறைவான வீரர்களிடம் மட்டுமே உள்ளது. கேன் வில்லியம்சன், பாபர் ஆஸம், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரிடம் இது இல்லை. ஆனால் விராட் கோலிக்கு இந்த திறமை இருக்கிறது ” என்று கூறியுள்ளார்!