பரிதாபமாக ரன் அவுட் ஆகிய பாபர் ; சிறப்பாக தொடங்கிய புத்தாண்டு கிரிக்கெட் ; வீடியோ உள்ளே!

0
290
Babar

சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றாய் இழந்து பலத்த அடி வாங்கிய பாகிஸ்தான் அணி, தற்பொழுது நியூசிலாந்து அணி உடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் வித்தியாசமாய் அடி வாங்கி வருகிறது!

இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் ட்ராவில் முடித்திருக்க இரண்டாவது டெஸ்ட் நேற்று கராச்சியில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரைசதம், மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் கான்வே சதம் அடிக்க வலுவான துவக்கம் கிடைத்தது. ஆனால் பின் வந்த வீரர்கள் அதை தக்க வைத்துக் கொள்ளவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி ஒன்பது விக்கட்டுகளை 345 ரண்களுக்கு இழந்தது. இதற்கு அடுத்து பத்தாவது விக்கட்டுக்கு ஹென்றி மற்றும் அஜாஸ் படேல் ஜோடி சேர்ந்து அசத்தலாக 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்து அணிக்கு முதல் இன்னிங்சில் 449 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார்கள். வெளிநாட்டு அணி ஒன்று பத்தாவது விக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்!

இதை அடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்கார அப்துல்லா சபியுக் 19 ரன்களிலும், மூன்றாவது ஆட்டக்காரர் ஷான் மசூத் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்து இமாம் உல் ஹக் மற்றும் கேப்டன் பாபர் ஆஸம் இருவரும் துரிதமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் இமாம் பந்தை தட்டி விட பந்து பௌண்டரி நோக்கி சென்றது, அப்பொழுது முதல் இரண்டு ரன்கள் ஓடிய இந்த ஜோடி, மூன்றாவது ரன்னுக்கு முயற்சி செய்ய, கேப்டன் பாபர் ஆஸம் எதிர்முனைக்கு வேகமாக ஓடி சென்று விட்டார். ஆனால் இமாம் தடுமாறி வராமல் அங்கேயே நின்று விட்டார். இதனால் பேட்டிங் செய்ய சொர்க்கபுரியான ஆடுகளத்தில் பரிதாபமாக கேப்டன் பாபர் ஆஸம் ரன் அவுட் ஆனார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -