32 வயதிற்குள் கேப்டன்சி செய்ய கற்றுக் கொள்வார் பாபர் ஆஸம் – கடுமையாய் தாக்கிய ஹபிஸ்!

0
5880
Hafeez

நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரின் மிகப்பெரிய போட்டி ஒன்றில் மோதியது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுக்க. இந்திய இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் பாகிஸ்தான் அணியின் தூண்களான துவக்க ஆட்டக்காரர்கள் பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரையும் மிக எளிதாக ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ஷான் மசூத் மற்றும் இப்திகார் இருவரும் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் அணி 159 என்று சவாலான ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 31 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது.

இந்த நிலையில் கேப்டன் பாபர் ஆசம் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து பவர் பிளேவுக்குப் பிறகு நகர்த்த ஆரம்பித்தார். பாகிஸ்தான் அணியில் மொத்தம் இருந்ததே 5 பந்துவீச்சாளர்கள் தான். பாகிஸ்தானின் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து 6 ஓவர்கள் வீசினார்கள். முகமது நவாஸ் தனது மூன்றாவது ஓவரில் இருபத்தி ஒரு ரன்கள் தர, கேப்டன் பாபர் அவரது நான்காவது ஓவரை கடைசி ஓவர்காக வைத்துக்கொண்டார். கடைசி ஓவருக்கு அவர் வர இந்திய அணி அவரை எளிதாய் எதிர்கொண்டு வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை தொடரிலும் இப்படித்தான் நடந்தது. அந்த போட்டியிலும் இந்த போட்டி போலவே இந்திய அணி வென்றது. தற்பொழுது தொடர்ந்து கேப்டன் பாபர் இப்படி செய்வது குறித்து விமர்சனங்கள் அதிக அளவில் எழ ஆரம்பித்து இருக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் வீரர் சலீம் மாலிக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கேப்டன் பாபரை கடுமையாகத் தாக்கிப் பேசி இருக்கிறார். அவரது பேச்சில் கடுமை மட்டும் அல்லாது எள்ளலும் தெறிக்கிறது.

பாபர் ஆஸமின் கேப்டன்சி குறித்து பேசிய முகமது ஹபீஸ் ” பாபர் கேப்டன்சி அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. தொடர்ந்து மூன்றாவது பெரிய ஆட்டத்தில் கேப்டன் பாபர் தவறு செய்வதை நாம் பார்க்கிறோம். அதே சமயத்தில் அவர் தனது 32வது வயதிற்குள் கேப்டன்சி செய்வது குறித்து கற்றுக் கொள்வார் என்று கேள்விப்படுகிறோம். ஏழாவது ஓவரில் இருந்து 14வது ஓவர் வரை ஓவருக்கு 4 ரன்கள் எடுக்க இந்தியா திணறிய பொழுது, அப்படியே தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்களை வீச வைத்து பாபா ஏன் அவர்களது ஓவரை முடிக்கவில்லை ” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.