ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய பாபர் அசாம் – 40 இடங்கள் முன்னேறியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர்

0
66
Babar Azam Virat Kohli and Shreyas Iyer

ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி போட்டிகள் சற்று முன்னர் வெளியானது. இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் 186 ரன்கள் குவித்து தொடர் முழுக்க அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 40 இடங்கள் முன்னேறி 37 வது இடத்திற்கு சென்றுள்ளார். இதற்கு முன்னர் இருபத்தி ஏழாவது இடத்தில் இருந்தவர் அதிக புள்ளிகளைப் பெற்று தற்போது 37 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

4 இடங்கள் பின்தங்கிய விராட் கோலி

இலங்கை அணிக்கு எதிராக தன்னுடைய 100 ஆவது மற்றும் 101ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் கூட இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தமாகவே 81 ரன்கள் மட்டுமே அவர் குவித்தார். ஒரு அரைசதம் கூட அவர் குவிக்கவில்லை. இதனால் அவருடைய டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் பெருவாரியாக குறைந்தது. கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த அவர் டெஸ்ட் புள்ளிகள் குறைந்த காரணத்தினால் தற்பொழுது 9வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

விராட் கோலியின் இடத்தை பிடித்த டிமுத் கருணரட்னே

இலங்கை அணியின் கேப்டன் டிமுத் கருணரட்னே இந்திய அணிக்கு எதிராக 4 இன்னிங்ஸ்களில் 166 ரன்கள் குவித்தார். குறிப்பாக 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் அவர் அற்புதமாக விளையாடி சதம் அடித்தார். இதன் காரணமாக அவருடைய டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

8வது இடத்தில் இருந்த அவர் தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் ஐந்தாவது இடத்தில் விராட் கோலி இருந்தது குறிப்பிடதக்கது.

இந்திய வீரர்கள் மத்தியில் முதலிடத்தில் ரோஹித் ஷர்மா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் மொத்தமாக 90 ரன்கள் குவித்தார். ரோஹித் ஷர்மா ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் இதற்கு முன் இருந்த அதே 6வது இடத்தில் தற்போதும் நீடிக்கிறார். விராட் கோலி 9வது இடத்திற்கு பின்தங்கியதால் தற்போது இந்திய வீரர்கள் மத்தியில் டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ரோஹித் இருக்கிறார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்கள் :

முதலிடத்தில் மார்னஸ் லாபஸ்சாக்னே, இரண்டாவது இடத்தில் ஜோ ரூட், மூன்றாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், நான்காவது இடத்தில் கேன் வில்லியம்சன், ஐந்தாவது இடத்தில் டிமுத் கருணரட்னே, ஆறாவது இடத்தில் ரோஹித் ஷர்மா, ஏழாவது இடத்தில் டிராவிஸ் ஹெட், எட்டாவது இடத்தில் பாபர் அசாம், ஒன்பதாவது இடத்தில் விராட் கோலி மற்றும் பத்தாவது இடத்தில் ரிஷப் பண்ட் இருக்கின்றனர்.