அனைத்து காலக் கட்டத்திற்குமான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் சச்சினைப் பின்னுக்குத் தள்ளிய பாபர் அசாம்

0
123
Sachin Tendulkar and Babar Azam

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கிலும், இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரேயொரு ஒரு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் 390 ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 196 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றினார். அதேபோல ஒருநாள் தொடரில் ஒரு அரைசதம் மற்றும் இரண்டு சதங்கள் உட்பட 276 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -
அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற ஒருநாள் போட்டிக்கான ஐசிசி சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளிய பாபர் அசாம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிக சிறப்பாக விளையாடியதால் பாபர் அசாமின் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை புள்ளிகள் கூடியுள்ளது. ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் அனைத்து காலத்திற்கு ஏற்ற ஐசிசியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் புள்ளி பட்டியலில் தற்பொழுது சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத்தள்ளி பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த தரவரிசை புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் சார் விவியன் ரிச்சர்ட்ஸ் 935 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஜாகீர் அப்பாஸ் (931), கிரெக் சேப்பல் (921), டேவிட் கோவர் (919), டீன் ஜோன்ஸ் (918) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். விராட் கோலி 911 ரன்களுடன் 6வது இடத்தில் உள்ளார்.

இதற்கு முன்பு 887 புள்ளிகளுடன் சச்சின் டெண்டுல்கர் 15வது இடத்தில் இருந்த நிலையில், தற்பொழுது 893 புள்ளிகளுடன் பாபர் அசாம் 15 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -
அடுக்கடுக்கான சாதனைகளை புரிந்துள்ள பாபர் அசாம்

அதேபோன்று 84 இன்னிங்ஸ்களில் தற்பொழுது பாபர் அசாம் 16 சதங்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பு ஹாஷிம் அம்லா 94 இன்னிங்ஸ்களில் 16 சதங்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரை பின்னுக்கு தள்ளி “ஒருநாள் போட்டி வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 16 சதங்கள் குவித்த வீரராக முதல் இடத்திற்கு பாபர் அசாம் முன்னேறியுள்ளார்”.

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் இரண்டாவது இன்னிங்சில் அதாவது சேஸிங் செய்யும் பொழுது அதிக சதங்கள் குவித்த வீரராக விராட்கோலி (13 சதங்கள்) முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் சவுரவ் கங்குலி(4 சதங்கள்) இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் சதமடித்து தற்பொழுது அவருடைய சாதனையை பாபர் அசாம்(4 சதங்களுடன்) பங்கு போட்டுள்ளார்.