பாபர் அசாம் பார்த்து பயப்படும் ஒரு வீரர்.. இதுவரை 5 முறை ஆட்டமிழந்துள்ள பாபர்

0
92
Babar Azam

பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தற்போது டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக இருக்கிறார். பாபர் அசாமை டி20 கிரிக்கெட்டின் பிராட்மேன் என்று ரசிகர்கள் போற்றி வருகின்றனர். பாபர் அசாமை ஆட்டம் இழக்க வைப்பது மிகவும் கடினம் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.பாபர் அசாமை ஆட்டம் இழக்க உங்களுக்கு ஒரு மேஜிக் பந்து வீச்சு தான் தேவை என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

பாபர் அசாமுக்கு பேட்டிங்கில் ஒரு குறையே இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இப்படி பாபர் அசாமை பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஆனால் பாபர் ஆசாமே கண்டு பயப்படும் ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் அது வேறு யாருமில்லை ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் ஒரு மாயாஜால பந்து வீச்சாளர் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆட்டத்தை தனது ஓவரால் தலைகீழாக மாற்றக்கூடிய திறமை உடையவர். ரஷித் கான் பந்து வீசினாலே தோனி கூட கொஞ்சம் அடக்கி வாசிப்பார்.

அந்த அளவுக்கு ரஷித் கான் மீது பல பேட்ஸ்மன்களுக்கு பயம் உள்ளது. இதில் பாபர் அசாமும் விதிவிலக்கல்ல. இருவரும் இதுவரை டி20 கிரிக்கெட்டில் பலமுறை விளையாடியிருக்கின்றனர்.இதில் ரஷித் கான் ,பாபர் அசாம்க்கு 48 பந்துகளை வீசி இருக்கிறார். இதில் பாபர் அசாம் 59 ரன்கள் அடித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ரஷித் கான் பந்துவீச்சில் இதுவரை ஐந்து முறை டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் ஆட்டம் இழந்திருக்கிறார்.

இதனால் ரஷித் கானை பார்த்து மட்டும்தான் பாபர் அசாம் பயப்படுவார் என்ற தெரிய வருகிறது. இதனால் பாபர் அசாமை வீழ்த்த வேண்டும் என்றால் சுழற்பந்துவீச்சாளர்கள் தான் மட்டுமே முடியும் என்று தெரிகிறது. ரஷித் கான் எப்படி பாபர் அசாமை கையாண்டு உள்ளார் என்ற வீடியோவை எதிரணிகள் பார்த்து அதிலிருந்து பாடம் கற்பித்து தாங்களும் அதே யுத்தியை பயன்படுத்தி பாபர் அசாமை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்த முடியும்.

- Advertisement -

டி20 கிரிக்கெட் பொருத்தவரை ஒரு வீரருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தினாலே அவர் ஆட்டம் இழந்து விடுவார், உதாரணத்துக்கு பேட்டிங் செய்யும் ஒரு வீரரை ரன் அடிக்க விடாமல் அடுத்தடுத்து டாட் பாலாக வீசினால் அவர் பொறுமை இழந்து தூக்கி அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்து விடுவார்.இந்த யுத்தியை பயன்படுத்தியே பாபர் விக்கெட்டை ரஷீத் கான் வீழ்த்தி இருக்கிறார். இது போன்ற ஒரு திட்டத்தை ரோகித் சர்மா பாபர் அசாம்க்கு எதிராக பயன்படுத்துவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.