பாபர் ஆஸமை பின்னுக்குத் தள்ளி சுப்மன் கில் உலகச் சாதனை!

0
6761
Gill

தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது!

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாான இந்தூர் ஆடுகளத்தில் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தங்களது அதிரடியான பேட்டிங்கால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை அசரடித்தனர்.

மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் இந்தப் போட்டியில் சதம் அடிக்க, நடுவில் விக்கட்டுகள் வேகமாய் விழுந்தாலும், இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக அரை சதம் அடிக்க இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து தற்பொழுது நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி 78 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்த சுப்மன் கில் புதிய உலகச் சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார். அதாவது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தமாக அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற உலகச் சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன் இந்த சாதனை பாபர் ஆஸம் வசம் இருந்தது!

சுப்மன் கில் – 360 ரன்கள்
பாபர் ஆஸம் – 360 ரன்கள்
இம்ப்ரூல் கைஸ் – 349 ரன்கள்
குயின்டன் டி காக் – 342 ரன்கள்
மார்ட்டின் கப்தில் – 330 ரன்கள்