50 ஓவர் கிரிக்கெட் பார்மெட்டில் விராட் கோலியை ஓவர்டேக் செய்து முன்னேறி சென்று விட்டார் பாபர் அசாம் – வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரின் கருத்து

0
37

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வகை பார்மெட்டிலும் பாகிஸ்தான் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றியது.

இந்த ஆண்டு அவர் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் குவித்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக ஒருமுறை இவர் 3 சதங்கள் குவித்தார். அதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 சதமும் அதையொட்டி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் என தொடர்ச்சியாக மூன்று சதங்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் தற்போது அவர் அதிரடியான பார்மில் உள்ளார்.

ஒருநாள் வீரர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 87 இன்னிங்ஸ்களில் இதுவரை அவர் 4442 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 அரைசதங்கள் மற்றும் 17 சதங்கள் அடங்கும். இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 59.23 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 90.27.

விராட் கோலியை கடந்து சென்றுவிட்டார்

அவ்வப்போது பாபர் அசாம், விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு சிறந்த வீரர் என்கிற வாதம் ரசிகர்கள் மத்தியில் முன் வைக்கப்படும். தற்பொழுது மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் பிஷப் பாபர் அசாம் மற்றும் விராட் கோலி குறித்து பேசியிருக்கிறார்.

“87 இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் அடித்து விட்டார். அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் விகிதம் 60ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவர் மகத்துவத்தை நோக்கி நகர்கிறார். தற்பொழுது அவர் விளையாடும் விதத்தை வைத்தும், அவர் அடுத்து அடுத்து சிறந்த நிலையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கும் ஃபார்மை வைத்து நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். அவர் அவருடைய போட்டியாளரான விராட் கோலியை ஓவர்டேக் செய்துவிட்டார். ஆம் விராட்கோலி அவர் முந்திவிட்டார் என்று இயான் பிஷப் கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மகத்தான வீரராக வலம் வருவார்

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அவர் படிப்படியாக தன்னை மெருகேற்றி கொண்டு வருகிறார். இதற்கு முன்பு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய எண்களை எடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் அதில் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளார். தொழில்நுட்ப ரீதியாக அவர் சிறந்த பேட்ஸ்மேன். இனி வரும் நாட்களில் நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த முதல் நான்கு வீரர்களில் அவரும் ஒருவராக இருப்பார் என்று இயான் பிஷப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக அவர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.