மீண்டும் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய பாபர்- விவரம் உள்ளே!

0
422
Babar azam virat kholi

நியூசிலாந்து அணியானது 19 வருடங்களுக்குப் பிறகு தற்போதைய பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டியானது, இன்று கராச்சி நகரில் தொடங்கியது .

இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 317 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி எனது  டெஸ்ட் கேரியரில் 9வது சதத்தைப் பதிவு செய்தார்.இன்றைய ஆட்ட நேர முடிவில் அவர் 161 ரன்களுடன் ஆட்டமிழக்காமல்  களத்தில் இருந்தார். இவருடன் சிறப்பாக ஆடிய சர்ப்ராஸ் அகமது 86 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது தற்போதைய பாகிஸ்தான் கேப்டனும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடியாக 194 ரன்களை சேர்த்தனர் .

இந்தப் போட்டியின் போது பாபர் அஸாம் 2022 ஆம் ஆண்டின்  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்  அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் இந்த வருடத்தில் மட்டும்  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1100 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 1088 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பாபர் இந்திய அணியின் ஸ்டார் கிரிக்கெட்டர் விராட் கோலியின் சராசரியை கடந்திருக்கிறார். தற்போது பாபர்அசாமின் சராசரி 50.43 ஆகும்.விராட் கோலியின் டெஸ்ட் சராசரியை முந்துவது  பாபருக்கு இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

ஒரே வருடத்தில் 1,000 ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் கேப்டன் என்ற சாதனையும்‌ பாபர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாமுல் ஹக்  2005 ஆம் ஆண்டு 999 ரன்கள் எடுத்தது ஒரு பாகிஸ்தான் கேப்டன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடத்தில் எடுத்த அதிக ரன்கள் ஆக இருந்தது. இதனை முறியடித்த பாபர் இந்த ஒரு வருடத்தில் மட்டும்1100 ரன்கள் எடுத்திருக்கிறார் .