“கோலியை விட பாபர் அசாம்தான் லீடிங்ல இருக்கார்.. அவர் சாம்பியன்!” – மேத்யூ ஹைடன் பரபரப்பான கருத்து!

0
359
Virat

இன்று ஆசியக் கோப்பையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது சுற்றில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. இந்தப் போட்டியில் வெல்லும் அணியே இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவனை நேற்று பாகிஸ்தான் வெளியிட்டது. பாகிஸ்தான அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களில் நசீம் ஷா காயத்தால் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். ஹாரிஸ் ரவுப் காயம் காரணமாக விளையாடும் அணியில் இடம் பெறவில்லை.

- Advertisement -

மேலும் மிக முக்கியமாக ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருந்து வந்த பகார் ஜமான் நீக்கப்பட்டு, முகமது ஹாரிஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் வேகப் பந்துவீச்சாளர்கள் ஜமான் கான் மற்றும் முகமது வாசிம் ஜூனியர் இருவரும் உள்ளே வந்திருக்கிறார்கள். மேலும் பகிம் அஷ்ரப் நீக்கப்பட்டு, சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் முகமது நவாஸ் இடம்பெற்று இருக்கிறார்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் நேபாள் அணியுடன் மட்டுமே 151 ரன்கள் அடித்திருக்கிறார். பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக அவர் நல்ல ரன்களை கொண்டு வரவில்லை.

இந்த நிலையில் இன்று இலங்கைக்கு எதிராக மிகவும் முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி களம் இறங்க இருக்கிறது. எனவே பேட்டிங் யூனிட்டில் கேப்டன் பாபர் அசாம் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அவருக்கு தனிப்பட்ட அழுத்தமும் இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறுகையில் “பாபர் அசாம் ஒரு சாம்பியன். அவர் இந்த விஷயங்களில் இருந்து மீண்டு வருவார். ஏனென்றால் சாம்பியன்கள் அதைத்தான் செய்வார்கள். மேலும் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஒப்பீடுகளை பார்த்தால், இந்த முக்கியமான போட்டியை அவரே முன்னின்று வழிநடத்துவார்.

எனவே பாகிஸ்தான் அணிக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்று தெரியும். இலங்கைக்கு எதிரான இந்த முக்கிய ஆட்டத்தில் அவரால் சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். பாபர் கேப்டனாக இருப்பதால் மட்டும் அல்லாமல், திறமையின் அடிப்படையில் அவர் பாகிஸ்தான் அணியின் மையமான வீரர்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டை நாம் பல ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்து புரிந்து கொள்கிறோம். பாகிஸ்தான் தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது, குறிப்பாக பாபர் அசாம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே அவர் தன்னுடைய வழக்கத்தில் இல்லாத பொழுது அது முக்கியமானதாக மாறுகிறது!” என்று கூறி இருக்கிறார்!