வீடியோ: “உன் பாய்ஃபிரண்ட் டீம்ல இருக்கணும்னா, நான் சொல்றத நீ கேக்கணும்”.. இளம் பெண்ணிடம் தவறாக பேசி வீடியோ ஆதாரத்துடன் வசமாக சிக்கிக்கொண்ட பாபர் அசாம்!

0
329

அணியில் சக வீரரின் பெண் தோழியிடம் தவறாக பேசியதாக பாபர் அசாம் மீது குற்றம் சாட்டப்பட்டு, வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் பாபர் அசாம். இவர் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கும், நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதி போட்டிக்கும் சென்றது.

சமீபத்தில் இங்கிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. நியூசிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் டிரா மட்டுமே செய்து படுமோசமாக பாகிஸ்தான் அணி செயல்பட்டது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்துடன் ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது.

இதன் காரணமாக மூன்று விதமான போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் பாபர் அசாம் நீக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. டெஸ்ட் போட்டிக்கு ஷான் மசூத், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு சதாப் கானின் பெயர்கள் அடிப்படுகின்றன.

இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் கடும் எதிர்ப்பையும் சிக்கலையும் சந்தித்து வரும் பாபர் அசாம், தற்போது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார்.

அணியில் இருக்கும் சக வீரரின் தோழியுடன் செல்போனில் தகாதவாறு பேசியதோடு, அந்த வீரர் அணிக்குள் இருக்க வேண்டும் என்றால், தொடர்ந்து இதே போல் என்னிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் என, பாபர் அசாம் மீது குற்றம் சாட்டி, இந்த செயலை வீடியோ ஆதாரத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நியாயம் கேட்டிருக்கிறார் பெண் ஒருவர்.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து எந்தவித பதிலும் தற்போது வரை வரவில்லை. அதேபோல் பாபர் அசாம் தரப்பிலிருந்தும் இதற்கான எதிர்ப்பும் வரவில்லை.

கடந்த 2020ஆம் ஆண்டு இதேபோன்று பெண் விவகாரத்தில் பாபர் அசாம் சிக்கினார். தன்னை கொன்று விடுவதாக மிரட்டல் விடுவதாகவும், தன்னுடன் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு அவமானம் செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும், ஹம்சா முக்தர் என்ற பெண் 2020ஆம் ஆண்டு பாபர் அசாம் மீது குற்றம் சாட்டினார். மேலும் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையின் கருவை கலைக்கும்படியும், அதற்கான தொகையை கொடுத்து விடுவதாகவும் வற்புறுத்தியதாகவும் புலனாய்வுத் துறையில் புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் இது போன்ற பெண் விவகாரத்தில பாபர் அசாம் ஆதாரத்துடன் சிக்கியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.