விராட் ரோகித் சாதனையை உடைத்த பாபர் அசாம்.. ஆனால் டி20 உலக கோப்பையில் தொடரும் சோகம்

0
39
Babar

இன்று டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்கா டல்லாஸ் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது சாதனைகளை முறியடித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான், உஸ்மான் கான் மற்றும் பகார் ஜமான் என மூவரும் ஏமாற்றம் தந்து வெளியேறினார்கள். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

இந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த சதாப் கான் மற்றும் பாபர் அசாம் இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை மீட்டு எடுத்தார்கள். சதாப் கான் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவருடன் இணைந்து விளையாடிய பாபர் அசாம் பொறுமையாக விளையாடி 43 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து கடைசி கட்டத்தில் ஷாகின் அப்ரிடி அதிரடியாக விளையாடி 16 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா தரப்பில் பந்துவீச்சில் கென்ஜிகே மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இந்த போட்டியில் பாபர் அசாம் 44 ரன்கள் எடுத்ததின் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். பாபர் அசாம் 120 போட்டிகளில் 4067 ரன்கள் எடுத்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் விராட் கோலி 118 போட்டிகளில் 4038 ரன்களும், ரோகித் சர்மா 152 போட்டிகளில் 4026 ரன்களும் எடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : அமெரிக்கா வெஸ்ட் இண்டீஸ்.. தனித்தனி பிளான் போட்ட ரோகித் டிராவிட்.. இந்தியா கப் அடிக்கும் போலயே

மேலும் பாபர் அசாம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பவர் பிளேவில் இதுவரை சிக்ஸர்கள் அடித்ததில்லை என்கின்ற சோகம் தொடர்கிறது. மேலும் பவர் பிளேவில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 87என மிக மோசமாக இருக்கிறது. இன்றைய போட்டியிலும் அவர் 43 பந்தில் 44 ரன்கள்தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.