ஹர்திக் பாண்டியா பற்றிய இந்திய பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பாகிஸ்தான் கேப்டன் பாசர் ஆசம் பளிச் பதில்!

0
233
Hardik pandya

இப்பொழுது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டிக்குப் பிறகு, ஹார்திக் பாண்டியா இந்திய அணிக்கு எவ்வளவு பெரிய முக்கியமான வீரர் என்று நிரூபணம் ஆகி கொண்டே வருகிறது!

பாகிஸ்தான் அணி ஒரு நிதான தொடக்கத்தை பேட்டிங்கில் முதலில் பெற்றது. துபாய் சர்வதேச மைதானம் ஆடுகளத்திற்கு சவால் அளிக்கக்கூடிய ஸ்கோரை எட்ட பாகிஸ்தான் அணியிடம் முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது, குஸ்தில் ஷா போன்ற அதிரடி வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் அதிரடியாய் ஆட்டத்தை ஆரம்பிக்கும் நேரத்தில், தனது இரண்டாவது பந்துவீச்சு ஸ்பெல்லை ஆரம்பிக்க வந்த ஆர்டிக் பாண்டியா, இவர்கள் மூன்று பேரையும் வரிசையாக வெளியேற்றி பாகிஸ்தானை குறைந்த ஸ்கோரில் தடுத்து நிறுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக போட்டி நடந்தால் துபாய் சர்வதேச மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் பெரியது. மட்டுமல்லாமல் ஆடுகளமும் பந்துவீச்சில் நல்ல பவுன்ஸரை கொடுத்தது. இதை இரண்டையும் கணக்கிட்டு ஹர்டிக் பாண்டியா பந்துவீச்சில் நல்ல ஷாட் பந்துகளை வீசி புத்திசாலித்தனமாக விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டி முடிந்த பிறகு இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் அவரை பாராட்டி பேசியிருந்தார்.

அதேபோல் பேட்டிங்கில் அழுத்தம் மிகுந்த நெருக்கடியான நேரத்தில் உள்ளே வந்து 17 பந்துகளில் 33 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றி பெறவும் வைத்தார். போட்டியை முடிக்கும்வரை அவரிடம் எந்த ஒரு சிறு பதட்டத்தையும் யாராலும் உருவாக்க முடியவில்லை. அவரது பேட்டிங் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்றாலும் நான் அடித்திருப்பேன் காரணம் அழுத்தம் எனக்கு கிடையாது பந்துவீச்சாளர்கள் தான் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் போட்டி முடிவுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அஸம் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டார். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய பத்திரிகையாளர் விமல் குமார் ” ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் ஆட்டத்தில் அவரால் பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும். அவரைப்போல் ஒருவர் கலந்துகொண்டால் இந்தியாவுக்கு நன்மை உண்டா? ” என்ற கேள்வியை எழுப்பினார்.

- Advertisement -

இதற்கு பதிலளித்த பாபர் ஆசம் ” கண்டிப்பாக! அவர் மிகவும் நன்றாக பந்துவீசினார் அவர் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் மிகச் சிறந்த ஒரு ஆல்ரவுண்டர். போட்டியை எடுத்து சென்று முடித்த விதம் மிகவும் நன்றாக இருந்தது” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!

ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளின் மோதலுக்குப் பிறகு விராட் கோலியை பற்றிய பேச்சுக்கள் குறைந்து ஹர்திக் பாண்டியா பற்றிய பேச்சுக்கள் தான் தற்போது அதிக அளவில் எல்லா மட்டத்திலும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!