ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட ஒரு விஷயம் தனக்கு பிடிக்காது எனவும் ஆனால் விதியை பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தொடர்ந்து போட்டிகளை வென்று உறுதியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டாம் பகுதியில் தோல்வி அடைந்து அந்த அணி வெளியேறியது.
மேலும் அக்சர் படேல் கடந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக பந்து வீச வரவில்லை. அவருக்கு 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் போது பந்தை சுழற்ற வேண்டிய விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தொடரில் இரண்டாம் பகுதியில் குணமடைந்து தொடர்ந்து பந்து வீசினார்.
அதேசமயத்தில் இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால் தான் அவர் பந்துவீச்சிக்கு இரண்டாம் பகுதியில் வந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் தனக்கு தாயம் ஏற்பட்டிருந்த காரணத்தினால் தான் முதல் பகுதியில் வீசாமல் இரண்டாம் பகுதியில்தான் வீசியதாக அவர் தற்போது கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அக்சர் படேல் பேசும் பொழுது “உண்மையைச் சொன்னால் ஐபிஎல் தொடரில் எனக்கு இம்பேக்ட் பிளேயர் விதியை பிடிக்காது. ஏனென்றால் நான் ஒரு ஆல் ரவுண்டர். முன்பெல்லாம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் ஒரு ஆல்ரவுண்டரை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இம்பாக்ட் பிளேயர் விதியால் தற்போது ஒரு பவுலர் அல்லது பேட்ஸ்மேனை நிர்வாகம் தேர்ந்தெடுக்கிறது”
இதையும் படிங்க: தோனி இத செய்யறதா இருந்தா ஆடவே வேண்டாம்.. சஞ்சு மீதியை பாத்துக்குவார் – ஸ்ரீகாந்த் பேச்சு
“எனவே நான் ஒரு ஆல் கவுண்டராக இருப்பதால் எனக்கு இந்த விதி பிடிப்பதில்லை. ஆனாலும் விதி எல்லோருக்கும் பொதுவானது. எனவே நாம் அவற்றை பின்பற்றி தான் ஆக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.