ஐபிஎல் 2021-ல் விளையாடுவதை உறுதி செய்த 5 ஆஸ்திரேலிய வீரர்கள்

0
145
Glenn Maxwell IPL RCB

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் ஆட்டங்கள் கொரோனாவால் தடைபட, மீதம் இருந்த ஆட்டங்களை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்தது BCCI அமைப்பு. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறாமல் அமீரகத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ கூறியிருந்தது. ஆனால் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ஆட்டங்களில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என்பது பெரிய கேள்வியாக இருந்து கொண்டே இருந்தது. காரணம் பல நாடுகளுக்கு அப்போது சர்வதேச ஆட்டங்கள் ஆட வேண்டிய சூழல் இருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல்கள் அப்போது வெளியானது.

ஆனால் இப்போது ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அந்த நாடு அறிவித்தது. கூடவே ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வீரர்களும் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள் என்று அந்நாடும் கூறியுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதுபற்றி கூறும்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் முடிவு வீரர்கள் எடுக்க வேண்டியது என்று கூறியுள்ளனர்.

- Advertisement -
Steve Smith Delhi

ஸ்டீவன் ஸ்மித், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், க்றிஸ் லின் மற்றும் கூல்டர் நைல் என இது வரை ஐந்து ஆஸ்திரேலிய வீரர்கள் IPL தொடரில் ஆட சம்மதம் தெரிவித்துள்ளனர். ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஸ்டொய்னிஸ் இருவரும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணிக்காக ஆடுகின்றனர். மேக்ஸ்வெல் பெங்களூரு அணிக்கும் கிறிஸ் லின் மற்றும் கூல்டர் நிலை மும்பை அணிக்கும் ஆடுகின்றனர். இதில் மேக்ஸ்வெல் பெங்களூரு அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். க்றிஸ் லின் மும்பை அணிக்காக துவக்க ஆட்டத்திலேயே அரைசதம் கடந்தார். மேலும் ஸ்டொய்னிஸ், ஸ்டீவன் ஸ்மித், கூல்டர் நைல் போன்ற உலகத்தர வீரர்களும் ஆட காத்திருக்கின்றனர்.

துபாய் அபுதாபி சார்ஜா என்று மூன்று மைதானங்களில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்க இருக்கின்றன. கடந்தமுறை கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர் நின்று போனது. இந்த முறை அப்படி ஆகாமல் இருப்பதற்காக பிசிசிஐ பல முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆட வரும் ஒவ்வொரு அணியினரும் தங்கள் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் நிச்சயமாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த அறிவிப்பால் மீண்டும் ஐபிஎல் திருவிழாவை காண ரசிகர்கள் .தயார் நிலையில் உள்ளனர்.

- Advertisement -