இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலியா வீரர்களிடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாக கூறியதற்கு ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வீரர்களிடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாக கவாஸ்கர் மறைமுகமாக பேசியதற்கு, ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்.
சுனில் கவாஸ்கர் சர்ச்சை கருத்து
முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்த பொழுது பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜோஷ் ஹேசில்வுட் தோல்வி குறித்து பேட்மேன்களிடம்தான் கேட்க வேண்டும் என்னிடம் கேட்கக் கூடாது என்பது போல விரக்தி ஆக பதில் அளித்து இருந்தார். இதனால் அணி வீரர்களிடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் எழுத ஆரம்பித்தன.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த சுனில் கவாஸ்கர் ஜோஷ் ஹேசில்வுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது மர்மமாக இருப்பதாக கூறியிருந்தார். அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விதத்திற்காக அணிக்குள் மீண்டும் ஏதோ பிளவு ஏற்பட்டு இருப்பதாக மறைமுகமாக தெரிவித்து இருந்தார்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் டிராவிஸ் ஹெட் கூறும் பொழுது “கவாஸ்கர் கருத்துகளால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். ஆஸ்திரேலியா அணி ஹேசில்வுட்டை ட்ராப் செய்துவிட்டது போன்ற சில கருத்துக்களை அவர் பேசியிருந்தார். இங்கு பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்கப்படுகிறது. கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு வணிகத்தில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவர் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இருக்கிறார். எனவே இப்படி பேசுகிறார்”
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் கூட ஆடறது இப்படி ஆனதுதான்.. ஆனா ஒன்னு நான் சொல்ல மாட்டேன் ரோகித் சொல்வார் – கேஎல் ராகுல்
“நீங்கள் வெற்றி பெறும்போது விஷயங்கள் வேறு மாதிரியாக இருக்கிறது. நீங்கள் தோல்வியடையும் பொழுது அணி பற்றி பலவிதமான கருத்துக்கள் வெளியில் வருகிறது. இப்போதைய ஆஸ்திரேலியா அணி மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் சேர்ந்து விளையாடிய அணி. நாங்கள் வெற்றி பெறுவது வித்தியாசமானது கிடையாது. நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி இருக்கிறார்.