இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
தற்போது இந்திய பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று பிரிஸ்பேன் ஆலன் பார்டர் ஃபீல்டு மைதானத்தில் நடைபெற்றது.
சுருண்டு விழுந்த இந்திய அணி
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகளாக வந்த பிரியா பூனியா 17 பந்தில் 3 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 10 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து ஹர்லின் டியோல் 19, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 17, ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 23, ரிச்சா கோஸ் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இறுதியாக இந்திய 34.2 ஓவர்களில் 100 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் விக்கெட்டுக்கு 9 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்த நிலையில் அதற்கடுத்து 91 ரன்னுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் மேகன் ஸ்சுட் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
டி20 ஆடிய ஆஸ்திரேலியா மகளிர் அணி
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய வீராங்கனைகளை மனரீதியாக பின் தள்ளுவதற்காக ஆஸ்திரேலிய வீராங்கனைகள் குறைந்த இலக்கை டி20 கிரிக்கெட் விளையாடுவது போல விளையாடி எட்டினார்கள். ஆஸ்திரேலிய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 16.2 எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.
இதையும் படிங்க : ஸ்டார்க்கை மட்டும் இல்ல.. என்னையும் ஜெய்ஸ்வால் இந்த மாதிரி ஸ்லெட்ஜிங் பண்ணார்.. இது உண்மை – நாதன் லயன் பேட்டி
ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீராங்கனைகள் லிட்ச்ஃபீல்டு 29 பந்தில் 35 ரன்கள், ஜார்ஜியா வோல் 42 பந்தில் 46 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சில் ரேணுகா சிங் மூன்று விக்கெட்டுகளையும், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.