இந்தியாவை காலி பண்ண ஆஸ்திரேலியாவிடம் இப்படிபட்ட வீரர் இருந்தால் போதும் – முன்னாள் பயிற்சியாளர் அறிவுரை!

0
2624

இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்றால் இப்படிப்பட்ட வீரர் அணியில் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமன்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி 9ம் தேதி துவங்குகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த டெஸ்ட் தொடரை குறைந்தபட்சம் 2-1 என வென்றால் மட்டுமே இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

அதேநேரம் ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுவிட்டோம் என்று எளிதாக எடுத்துக் கொள்ளாது. ஏனெனில் ஆஸ்திரேலியா அணி நீண்டகாலமாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

- Advertisement -

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா இரண்டு முறை ஆஸ்திரேலியாவிற்கு சென்று இரண்டு முறையும் டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிட்டது. இதற்கு பலி வாங்கும் நோக்கில் ஆஸ்திரேலியா அணி தீவிரமாக தங்களது பயிற்சிகளை செய்து வருகிறது. பல்வேறு திட்டங்களும் வகுக்கப்பட்டு வருவதாக தகவல் வருகின்றன.

2017ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு பயிற்சியாக இருந்தவர் டேரன் லேமன். அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ரிஸ்ட் ஸ்பின்னர் ஸ்டீவ் ஓ’கீப். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்டார்.

இதன் அடிப்படையில், இந்த முறை ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் முழுக்க முழுக்க ரிஸ்ட் ஸ்பின்னர்களை நம்ப வேண்டும். அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் டேரன் லேமன்.

“பொதுவாக அனைத்து இந்திய மைதானங்களிலும் ரிஸ்ட் ஸ்பின் நன்றாக எடுபடும். ஏனெனில் காற்றில் பந்தை அதிக சுழற்சியுடன் தூக்கி வீசும் பொழுது, அதை காற்றிலே அடித்து விட்டால் எந்தவித பிரச்சனையும் இல்லை. தடுத்து விளையாட வேண்டும் என்று பொறுமையாக விளையாட முயற்சித்தால் பந்து பிட்ச்சில் குத்திய பிறகு ஸ்கிட் ஆகி எதிர்பார்த்ததை விட இன்னும் வேகமாக பேட்டிற்கு வரும். அந்த நேரத்தில் எல்பிடபிள்யு ஆவதற்கு அதிக வாய்ப்புகளும் இருக்கின்றன. இதனை கவனத்தில் கொண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு அணிக்குள் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

நான் கடந்த முறை பயிற்சியாளராக இருந்த பொழுது இந்த யுக்தியை பயன்படுத்தி முதல் டெஸ்ட் போட்டியை வென்றேன். அப்போட்டியில் ரிஸ்ட் ஸ்பின்னர் மட்டுமே முழுக்க முழுக்க பயன்படுத்தினேன். வேறு எந்த யுக்தியும் தேவையில்லை. இந்திய அணியின் தேர்விலும் நாம் அதை பார்க்கலாம். அவர்களிடம் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தான் அதிக அளவில் இருக்கிறார்கள். ஓரிரு நார்மல் ஸ்பின்னர்கள் இருந்தாலும், கண்டிஷன் நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றனர். நாம் அந்தத் திட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.