578 ரன்களுக்கு டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா.. கிட்டத்தட்ட 390 ரன்கள் முன்னிலை; பிரகாசமாகும் இந்தியாவின் இறுதிபோட்டி வாய்ப்பு!

0
2118

ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 386 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இதனால் தென்னாபிரிக்கா வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவின் இறுதிபோட்டி வாய்ப்பை அதிகரிக்குமா? என்பதை பார்ப்போம்.

மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

அதன் பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர் டேவிட் வார்னர் தனது நூறாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து பல வரலாற்றுச் சாதனைகளை படைத்தார்.

வார்னர் 255 பந்துகளில் 200 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். மற்றொரு மூத்த வீரர் ஸ்மித் 85 ரன்கள் ஆட்டம் இழந்தார். ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் விரலில் காயம் ஏற்பட்டு இரண்டாம் நாள் ஆட்டத்தின் பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார்.

மூன்றாம் நாள் காலை மீண்டும் பேட்டிங் செய்ய வந்த கிரீன் 51 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ‘பாக்சிங் டே’ போட்டியாக நடைபெற்று வரும் இதில் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மிகச் சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார். அவர் 111 ரன்களுக்கு அவுட் ஆனார். முதல் இன்னிங்சில் 575/8 என இருந்தபோது ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. 386 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

- Advertisement -

3ம் நாள் ஆட்டத்திலேயே கிட்டத்தட்ட 40 ஓவர்கள் மீதம் இருக்கின்றன. அதைத்தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் மீதம் இருக்கின்றன. தென்னாபிரிக்கா அணி இந்த 386 ரன்கள் பின்தங்கியுள்ளதை கடந்து இலக்கை நிர்ணயிக்க வேண்டும். தற்போதைய நிலையில் இது தென்னாபிரிக்கா அணிக்கு அசாத்தியமான ஒன்றாக இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவிற்கு எவ்விதத்திலும் பாதிக்காது. அதேநேரம் தென்னாபிரிக்காவின் வெற்றி சதவீதம் குறையும். இது இந்தியாவிற்கு சாதகமாக அமையும்.