3 வீரர்களை விளாசிய பேட் கம்மின்ஸ்.. கில்கிறிஸ்டுக்கும் அதிரடி பதில்.. நடந்தது என்ன? – முழு தகவல்கள்

0
132
Cummins

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய, ஆஸ்திரேலிய இங்கிலாந்து முன்னாள் வீரர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹேசில்வுட் தங்கள் அணியின் பேட்ஸ்மேன் சரியாக விளையாடவில்லை என்பது போல பேசியதை வைத்து கவாஸ்கர் மைக்கேல் வார்டன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் மூவரும் அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாக பேசி இருந்தது தற்பொழுது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.

- Advertisement -

மூன்று முன்னாள் வீரர்களின் கருத்துக்கள்

இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இது குறித்து பேசும் பொழுது ஹேசில்வுட் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விதத்தின் காரணமாகவே அவர் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை என்றும் ஆஸ்திரேலியாவில் பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறும் பொழுது ஆஸ்திரேலியா அணியில் டிரெஸ்ஸிங் ரூம் பிளவு பட்டு இருப்பதாக தான் நினைப்பதாக தெரிவித்து இருந்தார். மைக்கேல் வாகன் கூறும் பொழுது இப்படி ஆஸ்திரேலியா வீரர்கள் வெளிப்படையாக வந்து தங்கள் அணியை பற்றி வெளியில் பேச மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார்கள்.

- Advertisement -

பேட் கம்மின்ஸ் கொடுத்த பதிலடி

இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும்பொழுது “எங்களுடைய அணி சார்பாக இருக்கிறது. ஆனால் சில கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இதை முழுக்க தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எப்பொழுதும் செய்வது போலவே சிறப்பாக ஒருவருக்கொருவரை ஆதரித்து தயாராகி இருக்கிறோம். ஒருவருடன் ஒருவருக்கு நல்ல பிணைப்பு அணிக்குள் இருக்கிறது”

இதையும் படிங்க: அஸ்வின் ஜடேஜா விஷயத்தில் நடந்தது இதுதான்.. துரதிஷ்டவசமாக நான் ஸ்பாட்ல இல்ல – ரோகித் சர்மா விளக்கம்

“உங்களுக்கு விஷயங்கள் சரியாக செல்லாத பொழுதும் உங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய வர்ணனையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் சில கிரிக்கெட் வரலையாளர்கள் தலைப்புச் செய்திகளை உருவாக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் இதை கவனிக்காமல் இருப்பதற்கு முயற்சி செய்கிறோம். நாங்கள் எங்களுடைய விஷயங்களைப் பற்றிக் கொண்டு செல்ல விரும்புகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -