சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடல.. அதனால இந்தியாவில் இதை செய்வதே என் திட்டம் – பேட் கம்மின்ஸ் பேட்டி

0
919

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கேப்டன் ஆன பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை. தற்போது ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்த தொடரில் பங்கு பெற்று விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தன்னுடைய அடுத்த திட்டம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் ட்ராஃபியிலிருந்து விலகல்

ஆஸ்திரேலியா அணியின் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படும் பேட் கம்மின்ஸ், கடைசியாக இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை வென்று கொடுத்துவிட்டு கணுக்கால் காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து விலகினார். மேலும் முக்கிய ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு முன்பாக அவரது காயம் குணமாகாத நிலையில் இதிலிருந்தும் அவர் வெளியேறி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அவரது காயம் மெல்ல மெல்ல குணமாகி வருகிறது. எனவே கம்மின்ஸ் அடுத்ததாக நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பங்கு பெறுவதே தனது முக்கிய நோக்கமாக தற்போது இருக்கிறது என்று சில கருத்துக்களை கம்மின்ஸ் பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகவும் கம்மின்ஸ் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்னுடைய அடுத்த திட்டம் இதுதான்

இது குறித்து அவர் விரிவாக பேசும் போது ” தற்போது எனது கணக்கால் நல்ல வலுவடைந்து வருகிறது. அதற்கு போதிய அளவு என்னால் ஓய்வு கொடுக்க முடிந்தது. நிறைய கிரிக்கெட் போட்டிகளில் நீங்கள் தொடர்ந்து விளையாடும்போது இதனை செய்ய முடியாது. எனவே இப்போது அது நல்ல நிலையில் இருப்பதாக நான் உணர்கிறேன். ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது திட்டம்.

இதையும் படிங்க:அந்த அணியை ஜெயிச்சா.. உலக கோப்பையை ஜெயிச்ச மாதிரி.. கோலி டீம் இதை செஞ்சிருக்கு – சுனில் கவாஸ்கர்

எனவே சில வாரங்கள் பந்து வீசுவதன் மூலமாக மீண்டும் தனது வலிமை நிலையை அடைய முடியும். எனவே அது குறித்து தற்போது கவலை கொள்ள வேண்டியதில்லை. சில நேரங்களில் வித்தியாசமான சுற்றுப்பயணத்தை தவிர்ப்பதன் மூலமாக நீங்கள் ஆண்டு முழுவதும் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாதவாறு பார்த்துக் கொள்ளலாம். கடந்த காலங்களில் நீங்கள் எல்லா வகையான கிரிக்கெட் தொடர்களையும் விளையாடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். எனவே இப்போது முக்கியமான போட்டிகளை மட்டும் ஆராய்ந்து அதில் பங்கு பெறுவது நல்லதாகும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -