வெறித்தனமான கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா.. இங்கிலாந்து 273 ரன்களுக்கு ஆல் அவுட்! – ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

0
5424

ஆசஸ் தொடரின் முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. ஆஸ்திரேலியா அணி 281 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் வலுவான நிலையிலும் இருக்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 393 ரன்கள் அடித்த டிக்ளர் செய்தது. அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஜொ ரூட், ஆலி போப் இருவரும் களத்தில் இருந்தனர். போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே தடைப்பட்டது.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் மற்றும் போப் இருவரும் பேட்டிங் துவங்கினர். போப் 14 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு உள்ளே வந்த ஹாரி புரூக் களத்தில் இருந்த ஜோ ரூட் உடன் ஜோடி சேர்ந்த நான்காவது வீட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் சேர்த்தது.

ஜோ ரூட் 46 ரன்கள் அடித்திருந்தபோது நேத்தன் லயன் பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டம்பிங் அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக நன்றாக விளையாடி வந்த ஹாரி புரூக் தனது அதிரடி வெளிப்படுத்தி பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் செல்வார் என இருந்தபோது அவரும் 46 ரன்களுக்கு லயன் பந்தில் அவுட் ஆனார்.

- Advertisement -

முதல் இன்னிங்சில் சொதப்பிய பென் ஸ்டோக்ஸ் இந்த இன்னிங்ஸில் 43 ரன்கள் அடித்திருந்தார். இவரும் பெரிய ஸ்கொரை எட்டுவதற்கு உதவாமல் ஆனார். முதல் இன்னிங்சில் கலக்கிய ஜானி பேர்டோ இந்த இன்னிங்ஸில் வெறும் 20 ரன்கள் மட்டுமே அடுத்து ஆட்டமிழக்க, 210 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம் கண்டது.

கீழ் வரிசையில் மொயின் அலி 19 ரன்கள், ராபின்சன் 27 ரன்கள், ஆண்டர்சன் 12 ரன்கள், பிராட் 10 ரன்கள் என ஆங்காங்கே பங்களிப்பை கொடுக்க, 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி. மொத்தம் 280 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 251 ரன்கள் தேவைப்படுகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் எப்போது என்ன நடக்கும் என்பதே தெரியாமல் எதற்காக அவசரப்பட்டு முதல் இன்னிங்சில் இவ்வளவு விரைவாக டிக்ளேர் செய்ய வேண்டும்? என்று தற்போது ஸ்டோக்ஸ் எடுத்த முடிவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.