பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா; மேத்யூ வேட் மீண்டும் அபாரம்!

0
323
Aus vs Wi

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு வீரர்கள் புதிதாக அறிமுகமானார்கள்.

இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை முதலில் தேர்ந்தெடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மிச்செல் மார்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் திரும்ப வந்து இருந்தார்கள்.

- Advertisement -

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைய்ல் மேயர்ஸ் 39 (39), ஓடியன் ஸ்மித் 27 (17) ஆகியோர் மட்டுமே சராசரியான பங்களிப்பை தர, எக்ஸ்ட்ரா வகையில் 15 ரன்கள் வர, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு145 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேஸில்வுட் 4 ஓவர்கள் பந்துவீசி 35 ரன்கள் தந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் தர, இந்தியா உடனான டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய கேமரூன் கிரீன் அனுப்பி வைக்கப்பட்டார். இவருடன் டேவிட் வார்னர் வந்தார். இவர்கள் இருவருமே தலா 14 ரன்கள் எடுத்து திரும்பினார்கள்.

கேப்டன் ஆரோன் பின்ச் 4-வது வீரராக களம் இறங்கினார். இடையில் மிச்செல் மார்ஸ் 3 ரன்களில் பெவிலியன் புக, மேக்ஸ்வெல் மற்றும் டிம் டேவிட் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள் ல். இதற்கடுத்து கேப்டன் ஆரோன் பின்ச் உடன் மேத்யூ வேட் கைகோர்த்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியை எளிதாக வெற்றி பெற வைக்கும் அளவிற்கு எடுத்துச் சென்றது.

- Advertisement -

ஆனால் ஆரோன் பின்ச், அதற்கடுத்து வந்த பேட் கம்மின்ஸ் இருவரும் ஆட்டமிக்க நிலைமை தலைகீழாக மாறியது. கடைசி ஓவருக்கு ஆஸ்திரேலிய வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்ட்ரெல் வீச, ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ வேட் எதிர்கொண்டார், அவர் முதல் மூன்று பந்துகளில் 4, 2, 1 என ஏழு ரன்கள் எடுக்க, கடைசி மூன்று பந்துகளுக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்டது. இப்போது பேட்டிங் முனையில் இருந்தது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இவர் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் தலா இரண்டு ரன்கள் என நான்கு ரன்கள் எடுத்து ஒரு பந்து மீதம் இருக்க ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்துவிட்டார்.

145 என குறைந்த ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்திருந்தாலும், பந்துவீச்சில் மிகச் சிறப்பாக ஆட்டத்தை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று போராடியது. ஆனால் இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை. இந்த ஆட்டத்தின் நாயகனாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தேர்ந்தெடுக்கப்பட்டார்!