டி20 சாம்பியன் இங்கிலாந்தை ஓடவிட்ட ஆஸி.. ஸ்மித் சதத்தை தவறவிட்டார்

0
2973

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் சிட்னியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கம்மின்ஸ்க்கு ஒய்வு வழங்கப்பட்டது. இதனால் டாஸ் வென்ற தற்காலிக கேப்டன் ஹேசல்வுட், முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து தொடக்க வீரராக டேவிட் வார்னர் , டிராவிஸ் ஹேட் ஆகியோர் களமிறங்கினர்.

- Advertisement -

வார்னர் 16 ரன்களிலும், டிராவிஸ் ஹேட் 19 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபஸ்செங் ஜோடி பொறுமையாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. மார்னஸ் லாபஸ்செங் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அலெக்ஸ் கேரி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் 114 பந்துகளை எதிர்கொண்டு 94 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார்.

இந்தத் தொடரில் ஸ்மித் இரண்டாவது முறையாக அரைசதம் அடித்திருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது ஸ்மித் தொடர்ந்து நான்கு இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்திருக்கிறார். இதனை அடுத்து களமிறங்கிய மிச்சல் மார்ஸ் அரைசதம் அடிக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலியா அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரசித் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

- Advertisement -

282 எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலே ஜேசன் ராய் மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர். மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பில் சால்ட் மற்றும் ஜேம்ஸ் வீன்ஸ் பொறுமையாக விளையாடினர். பில் சால்ட் 23 ரன்களில் ஆட்டம் இழக்க, வின்ஸ் 60 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதேபோன்று நடுவரிசையில் சாம் பில்லிங்ஸ் அபாரமாக விளையாடி 72 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதை எடுத்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் திரும்பினார். இதனால் இங்கிலாந்து அணி 208 ரன்கள் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய வீரர் மிச்சல் ஸ்டார்க் மற்றும் ஆடம் சம்பா தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.