113 ரன்களில் சுருண்ட ஆஸி.. ஜடேஜா 7 விக்கெட்டுகளை சாய்த்தார்

0
825

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று வருகிறது. ஆக்சன் மசாலா படங்களுக்கு இணையாக பல்வேறு திருப்பங்களுடன் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட்டுக்கு சவால் அளிக்கும் விதமாக இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 262 ரன்கள்  எடுத்தது. இதனை அடுத்து ஒரு ரன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை சிறப்பாக தொடங்கினர். கடைசி இன்னிங்ஸில் விளையாடியது மிகவும் கடினம் என்பதால் இந்தியாவுக்கு பெரிய இலக்கை  நிர்ணயிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை காட்டினர்.

இதனால் டிராவிஸ் ஹெட் 39 ரன்களும் ,மார்னஸ் லாபஸ்சேன் 16 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தொடங்கினர். அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கலாம் என நினைத்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆரம்பமே அஸ்வின் ஆப்பு வைத்தார்.

ஆடுகளத்தின் தன்மையை கணிக்காமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடியாக விளையாடும் முற்பட்டு தங்களுடைய விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 43 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 9 ரன்களிலும் அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சின் ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து மார்னஸ் லாபஸ்சேம் பொறுப்புடன் விளையாடி 35 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

- Advertisement -

இதன் பிறகு மாட் ரீன்ஷா இரண்டு ரன்களில் அஸ்வின் பந்தில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களின் விக்கெட்டையும் ஜடேஜா சாய்த்தார். ஜடேஜாவின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் நடுங்கினர். பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் , அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், லயான் போன்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கம் ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது. வழக்கம் போல் நமது கே எல் ராகுல் ஒரு ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.