கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஆசியன் கேம்ஸ்.. 51 ரன்கள் ஆல் அவுட்.. 8.2 ஓவரில் முடிந்த போட்டி.. பங்களாதேஷை வீழ்த்தி பைனலில் இந்தியா.. வெள்ளிப் பதக்கம் உறுதி!

தற்பொழுது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளை அனுப்பி வைக்கின்றன.

- Advertisement -

கடந்த முறைகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் அணிகளை ஆசிய விளையாட்டு போட்டிக்கு அனுப்பவில்லை. இந்த நிலையில் இந்திய தரப்பில் இரண்டு அணிகள் கலந்து கொள்கின்றன.

தற்பொழுது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான கிரிக்கெட் தொடர் டி20 வடிவத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு அரைஇறுதி போட்டியில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களது முடிவு எவ்வளவு தவறானது என்று இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சில் காட்டினார்கள்.

- Advertisement -

பங்களாதேஷ் அணி 17.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் மொத்தம் ரன் ஏதும் எடுக்காமல் ஐந்து வீராங்கனைகள் ஆட்டம் இழந்தார்கள். மேலும் அந்த அணியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 12. இந்திய தரப்பில் பூஜா வஸ்ட்ரேகர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 17 ரன்களுக்கு நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி எட்டு புள்ளி இரண்டு ஓவர்களில் இலக்கை எட்டி, 70 பந்துகள் மீதம் வைத்து, இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை தற்பொழுது உறுதி செய்து இருக்கிறது.

இந்த அணி இறுதிப் போட்டியில் சந்திக்கும் அணியை வெல்லும் பட்சத்தில் தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்லும். இதன் மூலம் இந்தியாவுக்கு பெண்கள் கிரிக்கெட்டின் மூலம் சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் உறுதியாக இருக்கிறது. அதே சமயத்தில் தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

மேலும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இன்னும் சீனா செல்லவில்லை. இவர்களுக்கு அக்டோபர் துவக்கத்தில் போட்டிகள் ஆரம்பிக்கின்ற காரணத்தால், ருத்ராஜ் தலைமையிலான அணி தாமதமாக புறப்பட்டு செல்ல இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -
Published by