ஆசிய கோப்பை: தினேஷ் கார்த்திக் இடமில்லை; இந்தியாவின் பெஸ்ட் பிளேயிங் லெவன் – முன்னாள் வீரர் தேர்வு!

0
108

ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் 11 சிறந்த வீரர்களை தேர்வு செய்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பையின் 15 வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்க இருக்கிறது. துவக்க போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றனர். அதற்கு அடுத்ததாக ஆகஸ்ட் 28ஆம் தேதி கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகள் மோதும் போட்டி நடைபெறவிருக்கிறது.

- Advertisement -

கடைசியாக இந்த இரு அணிகளும் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது விளையாடின. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த சாகின் அப்ரிடி. இம்முறை ஆசிய கோப்பை தொடரில் அவர் இல்லை. மேலும் இந்திய அணியில் பும்ரா இல்லை. இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாதது அந்தந்த அணிகளுக்கு பின்னடைவு தான். மேலும் கடந்த முறை விராட் கோலி கேப்டனாக இருந்தார். இம்முறை ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடுகிறார்.

இந்திய அணியில் கடந்த ஒரு வருடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் சிறந்த 11 வீரர்கள் யார் என்பதை தேர்வு செய்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா. இவர் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து பேச்சாளர்களை தேர்வு செய்திருக்கிறார். இவரது அணியில் ஹர்திக் பாண்டியா கூடுதல் பந்துவீச்சாக இருக்கிறார்.

துவக்க வீரர்கள் இடத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரையும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரையும் தேர்வு செய்திருக்கிறார். இவரது அணியில் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ரிஷப் பண்ட் இடம்பெற்று இருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் இருக்கின்றனர். புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷதிப் சிங் ஆகிய இருவரும் இவரது அணியின் வேகப்பந்துவீச்சாளராக இருக்கின்றனர். சுழல் பந்துவீச்சு சாகல் அஸ்வின் ஜடேஜா மூவரும் இடம் பெற்று இருக்கின்றனர்.

- Advertisement -

டேனிஷ் கனேரியா தேர்வு செய்த இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள்

ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.