இலங்கையில் இந்த தேதியில் ஆசிய கோப்பை நடைபெற உள்ளதாக தகவல் – ஹாட்ரிக் பட்டம் வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்

0
90

முதல் முறையாக ஆசியக் கோப்பை 1984 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆசிய கோப்பை தொடரில் ஆசிய கண்டத்தில் ஐசிசி அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் அணிகள் அனைத்தும் பங்கேற்று விளையாடும். இதுவரை 15 முறை ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று உள்ளது.அதில் அதிக முறை இந்திய அணியே வெற்றி கண்டுள்ளது. இந்திய அணி மொத்தமாக 7 ஆசிய கோப்பையை இதுவரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு அடுத்தபடியாக இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடந்து முடிந்துள்ள 2 ஆசிய கோப்பை தொடர்களிலும் (2016 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் பார்மேட் மற்றும் 2018ஆம் ஆண்டு நடந்த டி20 பார்மேட்) இந்திய அணியே வென்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியும், 2018ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடர்

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிய கோப்பை தொடர் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் இலங்கையில் திட்டமிட்ட படி ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளதாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மீண்டும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை டி20 தொடர் நடைபெறுவதற்கு முன்பாக ஆசிய கோப்பை (டி20 பார்மேட்) நடைபெற உள்ளதும் கவனிக்கத்தக்கது. ஜூன் 9ஆம் தேதி துவங்கி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் அதன் பின்னர் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம், பின்னர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் அடுத்தடுத்த டி20 தொடர் என இது என்று பிஸியாக இருக்க போகிறது.

இந்திய அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்பதை காண இந்திய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்திய அணியில் தற்போது பல்வேறு இளம் வீரர்கள் உள்ள நிலையில் இந்திய அணி நிச்சயமாக ஆசிய கோப்பையை வென்று விடும் என்கிற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் உள்ளது.