ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிப்பு.. சாகல் அதிரடி நீக்கம்.. திலக் வர்மாவுக்கு வாய்ப்பு.. ரோகித் டிராவிட் புதிய ரூட்!

0
7532
ICT

இந்திய மண்ணில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரையில் முதல் முறையாக முழுமையாக நடைபெற இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக ஆகஸ்ட் 30ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளில் துவங்கும் ஆசிய கோப்பை போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களுடைய அணியை வெளியிட்டு இருக்கும் வேலையில் இந்திய அணி நிர்வாகம் மட்டும் ஆசிய கோப்பை காண அணியை வெளியிடுவதில் தாமதம் செய்து வந்தது.

முன்னணி வீரர்களின் காயமும் அவர்கள் குணமடைந்து வருகின்ற காரணமும் அணியை வெளியிட தாமதத்தை உருவாக்கியது. இந்த நிலையில் இன்று ஆசியக் கோப்பைக்கான அணி வெளியிடப்படும் என்று தகவல் இருந்தது. தற்பொழுது ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். இளம் வீரர் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. காயத்தில் இருந்து கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் திரும்பி வந்திருக்கிறார்கள். மேலும் சாகல் நீக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த அணி அறிவிப்பில் துணை கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று பேச்சுகள் இருந்தது. ஆனால் தற்சமயம் அவரே இந்திய அணிக்கான துணை கேப்டனாக தொடர்கிறார்.

2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி ;

ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், திலக் வர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா

பேக் அப் வீரர் – சஞ்சு சாம்சன்

இந்த அணி அறிவிப்பின் மூலம் இந்திய அணி நிர்வாகம் துவக்க இடத்தில் ரைட் லெப்ட் காம்பினேஷனை விரும்புகிறது என்று தெரிய வருகிறது. எனவே துவக்க வீரராக ரோகித் சர்மா உடன் இசான் கிஷான் துவங்குவார் என்று தெரிகிறது. கில் மற்றும் சாகல் நீக்கப்பட்டு இருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்!