ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய ரசிகர்களுக்கு அனுமதி இல்லையா? – குற்றச்சாட்டு வீடியோ இணைப்பு!

0
31
Asiacup2022

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 வடிவத்தில் இறுதிப் போட்டியை எட்டி துபாய் மைதானத்தில் இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் கடைசி ஆட்டத்தில் விளையாடிய அதே அணியைக் கொண்டு இறுதிப்போட்டியில் விளையாடுகின்றன.

இந்திய அணி இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளுக்கான கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் இருந்த அணி. இதனால் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை நிறைய இந்திய ரசிகர்கள் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் டிக்கெட் வாங்கி விட்ட இந்திய ரசிகர்கள் இறுதிப் போட்டியை காண மைதானத்திற்கு வந்துள்ளார்கள்.

தற்போது இதில் தான் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்திய அணி கிரிக்கெட் ரசிகர்கள் பாரத் ஆர்மி என்ற பெயரில் இயங்கி வருகிறார்கள். இவர்களுக்கு இந்திய ஜெர்சியில் இறுதிப்போட்டியில் மைதானத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இவர்கள் இலங்கை அல்லது பாகிஸ்தான் அணியின் ஜெர்சியை அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து காணொளியில் பேசியுள்ள பெண் ஒருவர் ” மைதானத்திற்குள் பாரத் ஆர்மி கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் ஜெர்சி அணிந்து கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. உள்ளே சென்று போட்டியை காண வேண்டும் என்றால் இலங்கை அல்லது பாகிஸ்தான் அணி ஜெர்சியை அணிந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்கள் ” என்று தெரிவித்துள்ளார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பனுக ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை குவித்துள்ளது. யுஏஇ மைதானங்களில் யார் டாஸை வென்று முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்கள் தான் வென்று வருகிறார்கள். இந்த விதி இந்த போட்டியில் மாறுமா இலங்கை மாற்றுமா என்று பார்க்கவேண்டும்.