ஆசியக்கோப்பை சாம்பியன் இலங்கை டி20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு!

0
192
Srilanka

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஆசிய சாம்பியன் ஆகியிருக்கிறது இலங்கை அணி.

இதற்கடுத்து ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக உலகின் முக்கிய கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றன. இந்த வகையில் இந்த டி20 உலகக் கோப்பைக்கான அணிகளை முதலில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் அறிவித்தன.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்களாதேஷ் வெஸ்ட் இண்டீஸ் இந்தியா ஆப்கானிஸ்தான் என தங்களின் டி20 உலகக் கோப்பைக்கான அணிகளை அறிவித்தன. டி20 உலகக்கோப்பைக்குத் தேர்வான ஆசிய அணிகளில் இலங்கை மட்டுமே இதுவரை தனது உலகக்கோப்பை அணியை அறிவிக்காமல் இருந்தது.

தற்பொழுது இலங்கை அணி தனது 15 பேர் கொண்ட அணியை டி20 உலகக்கோப்பைக்காக அறிவித்து இருக்கிறது. மேலும் ரிசர்வ் வீரர்களையும் அறிவித்து இருக்கிறது. ஆசியக் கோப்பையை கைப்பற்றி இருப்பதால் இலங்கை அணி கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறது.

மேலும் இலங்கை அணி இந்த டி20 உலக கோப்பை தொடருக்குத் தகுதிச்சுற்றில் மூலம்தான் முக்கியச் சுற்றுக்கு வரமுடியும். தகுதிச்சுற்றில் நெதர்லாந்து யுஏஇ போன்ற அணிகள்தான் இருக்கின்றன. இதனால் எப்படியும் இலங்கை அணி முக்கியச் சுற்றுக்குள் வந்துவிடும். மேலும் ஆஸ்திரேலிய சூழ்நிலைகள் பழக இந்த தகுதி சுற்று போட்டிகள் இலங்கை அணிக்கு கூடுதல் வாய்ப்பாகவே அமையும். மேலும் எல்லா அணிகளுக்கும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் உள்ளன என்பது தனி.

- Advertisement -

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட அணி :

கேப்டன் டசன் ஸனகா, குணதிலக, பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுக ராஜபக்சே, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மகீஷ் தீக்ஷன, ஜெப்ரி வாண்டர்சே, சமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, லஹிரு குமார, தில்சன் மதுசங்கா, பிரமோத் மதுஷன் என 15 பேர் அறிவிக்கப்பட்ட இருக்கிறார்கள். இதில் துஷ்மந்த சமீரா மற்றும் லகிரு குமார இருவரும் காயத்தின் பொருட்டு அணியில் தொடர்வார்கள் அல்லது நீக்கப்படுவார்கள்.

மேலும் இந்த 15 பேர் கொண்ட அணி இல்லாமல் 5 வீரர்களை ஸ்டேண்ட்பை வீரர்களாக அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் அசேன் பண்டார, பிரவீன் ஜெய விக்ரம, தினேஷ் சண்டிமால், பினோரா பெர்னாடோ மற்றும் நுவனிது பெர்னாடோ!