மீண்டும் வருகிறது ஆசியக் கோப்பை – போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தேதிகள் அறிவிப்பு

0
70
Asia Cup

முதல் முறையாக ஆசியக் கோப்பை 984 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதுவரை 15 முறை ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று உள்ளது அதில் அதிக முறை இந்திய அணியே வெற்றி கண்டுள்ளது. இந்திய அணி மொத்தமாக 7 ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு அடுத்தபடியாக இலங்கை அணி 5 முறையும் பாகிஸ்தான் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு நாள் போட்டிகளில் ஜெயசூர்யா 1220 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் மத்தியில் சச்சின் டெண்டுல்கர் 971 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுக்களை தான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை தொடர் வரலாற்றில் டி20 போட்டிகளில் ஹாங்காங்கை சேர்ந்த பாபர் ஹயாத் 194 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய வீரர்கள் மத்தியில் 153 ரன்களுடனும் விராட் கோலி முதலிடத்திலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்திலும் இருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் சேர்ந்த அம்ஜத் ஜாவேத் 12 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக முதலிடத்தில் உள்ளார்.

கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை(ஒரு நாள் போட்டி பார்மெட்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையை வென்றது.

இலங்கையில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை

2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2020 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை நடத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்த முடியாமல் போன ஆசிய கோப்பை தொடர் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெற இருக்கின்றது.

இலங்கையில் ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை இந்த ஆசிய கோப்பை ( 20 ஓவர் கிரிக்கெட் பார்மெட்) தொடர் நடைபெற இருக்கின்றது. 6 அணிகள் பங்கேற்க போகும் இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இத்தொடரில் விளையாட தகுதி பெற்றுவிட்டது. மீதமிருக்கும் ஒரு அணிக்கான இடத்திற்கு தகுதிச் சுற்று நடத்தப்பட்டு இறுதியில் ஒரு அணி தேர்ந்தெடுக்கப்படும்.

2016 மற்றும் 2018 என தொடர்ச்சியாக இரண்டு ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி இம்முறை மூன்றாவது முறையாக அதாவது ஹாட்ரிக் ஆசிய கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.