ஆசிய கோப்பை இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்க கூடிய 4 பேட்ஸ்மேன்கள்..

0
164
Asiacup


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்றால், அது இந்த 4 வீரர்களின் கையில் தான் இருக்கிறது. துபாய் அடுகளம் கொஞ்சம் தொய்வாக இருக்கும். பேட்டிற்கு பந்து அவ்வளவு எளிதாக வராது.

இந்த நிலையில், பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது கொஞ்சம் சவாலாதாக இருக்கும். இதில் முதல் இடத்தில் இருப்பது சூர்யகுமார் யாதவ் தான். டி20 போட்டி ஐசிசி தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார். 360 டீகிரி கோணத்திலும் ஷாட் அடிக்க கூடியவர். வேகப்பந்த, சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் அதிரடியாக ஆட கூடியவர். இதனால் சூர்யகுமார் யாதவ் எப்படி விளையாடுகிறாரோ, அதை பொறுத்து தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

- Advertisement -


இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கடந்த முறை டி20 உலககோப்பையில் இந்தியா தோற்றதுக்கு பாண்டியா சரிவர விளையாடாமல் போனதே காரணம். ஹர்திக் பந்துவீச்சில் எவ்வளவு முக்கியமோ, அதே போ பேட்டிங்கில் அவரது பங்களிப்பு முக்கியம். ஒரு வேலை இந்தியாவின் ரன் குவிப்பு வேகம் குறைவாக இருந்தால், அதனை இரட்டிப்பாக்கும் முயற்சியை ஹர்திக் பாண்டியா தான் பார்த்து கொள்ள வேண்டும்.


இதே போன்று இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோகித் சர்மாவை நம்பியே ஒட்டுமொத்த பேட்டிங்கும் உள்ளது என்று சொல்லலாம். கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதுக்கு முக்கிய காரணம், ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தது தான். இதனால் ரோகித் சர்மா தொடக்க வீரராக அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை தர வேண்டிய பொறுப்பில் உள்ளார்.

- Advertisement -


4வது வீரர், இந்திய அணிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்குமே முக்கியமான வீரர். தனி ஆளாக நின்று போட்டியின் முடிவையே மாற்ற கூடிய வீரர்.துபாய் ஆடுகளம் சுழற்பந்தவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், விராட் கோலியின் திறன் மிகவும் முக்கியமானது. கோலி ஒரு 50 பந்தை பிடித்து 70 ரன்கள் அடித்தாலே போதும், இந்தியா ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்கும்.