சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டிய ‘அஸ்வின்’- டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலும் ஒரு மைல் கல்!

0
172
ashwin kapil dev

பங்களாதேஷ் அணிக்கான டெஸ்ட் தொடரை 2-0, என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்திய அணி . இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளன்று பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 145 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேஸ் செய்து வெற்றி பெற்றது இந்தியா.

இந்தப் போட்டியில் எட்டாவது விக்கெட் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர் . அஸ்வின் 42 ரன்கள்டனும் ஸ்ரேயாஸ் 29 ரன்கள்டனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் இணைந்து எட்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 71 ரன்களை சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இந்தப் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்தார் . இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் அஸ்வின். இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றி கேப்டன் கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார் அஸ்வின் . இதற்கு முன்பு கபில் தேவ தான் டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும் 434 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தப் போட்டியில் 3000 ரன்கள் கடந்ததன் மூலம் அஸ்வின் அந்த சாதனையை முறியடித்துள்ளார் . கபில்தேவ் தனது 131 வது போட்டியில் 3000 ரன்களை கடந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் அஸ்வின் 88 வது டெஸ்ட் போட்டியிலேயே 3000 ரன்கள் கடந்து கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார் .

மேலும் ஒரு சாதனையாக உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரிச்சர்ட் ஹாட்லி அடுத்ததாக குறைவான போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஆல் ரவுண்டர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின். ரிச்சர்ட் ஹாட்லி 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3124 ரன்களையும் 431 விக்கெட் களையும் வீழ்த்தி இருக்கிறார் .
ரவிச்சந்திரன் அஸ்வின் 88 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 3043 ரன்களையும் 449 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

3000 ரன்கள் மற்றும் நான் ஒரு டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையை இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆறு வீரர்கள் மட்டுமே நிகழ்ச்சியுள்ளனர் . அவர்கள் நியூசிலாந்தைச் சார்ந்த ஆல் ரவுண்டர் ரிச்சர்ட் ஹாட்லி மற்றும் இந்தியாவைச் சார்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் . கபில் தேவ், ஆஸ்திரேலியா அணியின் வார்ன் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக் மற்றும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஆவர் .