இந்திய வீரர்களில் யாரும் செய்யாத மெகா சாதனையை படைத்த அஷ்வின்.. கபில்தேவ் கும்ப்ளே பின்னடைவு!

0
3143
Ashwin

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு, அணிகள் தங்களுடைய இறுதிப் பட்டியலை தருவதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 28ஆம் தேதி இருக்கிறது!

செப்டம்பர் 5ஆம் தேதி எல்லா அணிகளும் தங்களுடைய முதல் 15 பேர் கொண்ட அணியைத் தர வேண்டும். அதேபோல் இந்த அணியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், வருகின்ற 28ஆம் தேதி வரையில் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

தற்பொழுது ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றுக் கடைசிப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் காயமடைந்தார்.

இதன் காரணமாக அவருடைய இடத்திற்கு பரிசோதிப்பதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இருவரை இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலியா தொடரில் உள்வாங்கியது.

ஆனால் தற்பொழுது வரை வாஷிங்டன் சுந்தருக்கு விளையாடும் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. இரண்டு போட்டிகளிலும் ரவிச்சந்திரன் அஸ்வின்தான் விளையாடி வருகிறார். இரண்டு போட்டிகளிலும் ரன்களை கணிசமாக குறைவாக தந்ததோடு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் தற்பொழுது உருவாகி இருக்கிறது. அதே சமயத்தில் அக்சர் படேல் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டாரா? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றியதின் மூலம், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

அஸ்வின் ஆஸ்திரேலியா 144 விக்கெட்
கும்ப்ளே ஆஸ்திரேலியா 142 விக்கெட்
கபில்தேவ் பாகிஸ்தான் 141 விக்கெட்
கும்ப்லே பாகிஸ்தான் 135 விக்கெட்
கபில் தேவ் வெ.இ 135 விக்கெட்
கும்ப்ளே தென் ஆப்பிரிக்கா 130 விக்கெட்