ஹெட்மயரின் ரோஸ் நிற தலைமுடிக்கு இதுதான் காரணம் – உண்மையான காரணத்தைப் பகிர்ந்த சக வீரர் அஷ்வின்

0
3066
Shimron Hetmeyer Pink hairstyle Rajasthan Royals

விடுமுறை நாளான ஞாயிற நேற்று, ஐ.பி.எல் தொடரில் இரு போட்டிகள் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் கொல்கத்தாவை டெல்லியும், பரபரப்பான இரண்டாவது போட்டியில் லக்னோவை ராஜஸ்தானும் வீழ்த்தி இருந்தது!

நேற்றைய லக்னோ ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக, சர்வதேச கிரிக்கெட்டில் இருமுறை மட்டுமே நிகழ்ந்துள்ள அரிய சம்பவமான ரிடையர்ட் அவுட் நிகழ்வு, ராஜஸ்தான் அணி பேட்டிங்கின் போது, தமிழக வீரர் அஷ்வினால் நிகழ்ந்தது.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி பத்து ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழக்க, ஆறு பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்திருந்த ராஜஸ்தான், ரியான் பராக்கை பதுக்கி, அஷ்வினை முன்னே அனுப்பியது. நிலைத்து ஆடிய அஷ்வின், அடுத்து பராக் அடித்து ஆடுவதற்காக ரிடையர்ட் அவுட்டாகி வெளியே சென்றார்.

இந்த நிலையில் ஆட்டம் வெற்றியாய் முடிய, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் சில சுவாரசியமான சம்பவங்களை அஷ்வின் பகிர்ந்து கொண்டார். அதில் கிருஷ்ணப்பா கவுதமை ஹெட்மயரை அடிக்க வேண்டாம் என்றும், தான் அடிப்பதாகவும், தான் அவுட்டானால் பராக்குடன் சேர்ந்து நீ விளையாடு என்று ஹெட்மயரிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர் ஹெட்மயரைப் பற்றி “அவர் மனைவி எப்போதும் ஏதாவது தலையில் கலரிங் செஞ்சிவிட்டுக்கிட்டே இருப்பாங்களாம். ஐ.பி.எல் ஏலம் நடந்தப்ப அணிகள் ஹெட்மயரை ஏலம் கேட்க, ஏலம் கேட்கும் அணிகளின் கலரை தலையில் அடிச்சிட்டே இருந்திருக்காங்க. கடைசியா ராஜஸ்தான் ஹெட்மயரை ஏலத்தில் எடுக்கவும், பிங்க் கலரை அடிச்சி விட்டு இந்தியாவுக்கு ப்ளைட் ஏத்தி அனுப்பிட்டாங்க!” என்று கூடுதல் சுவாரசியமான தகவலை தெரிவித்தார்!