ஆட்ட நாயகன் விருதை ஏன் ஸ்ரேயாசுடன் பகிர்ந்து கொள்ளவில்லை – அஸ்வின் விளக்கம்!

0
2185
ashwin shreyas iyer

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0  என்ற கணக்கில்  வெற்றி பெற்றது இந்திய அணி. நேற்றைய மூன்றாம்  நாள் ஆட்டத்தின் முடிவின்போது 45/4  விக்கெட்டுகளை இழந்து  வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தது .

இன்றைய  நான்காம் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில்  மேலும் மூன்று விக்கெட்டுகளை இழந்து  74 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற  இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது இந்திய அணி . அப்போது பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய  ரவிச்சந்திரன்  அஸ்வின்  மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும்  எட்டாவது விக்கெட்டுக்கு   ஜோடியாக 71  ரன்களை சேர்த்து  இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர்.

- Advertisement -

நான்காம் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆடுகளம்  பந்து வீச்சிக்கு சாதகமாக இருந்தது. மேலும் பந்துகள் அதிக அளவில் திரும்பின வலது கை பேட்ஸ்மேன்கள் ஆடும்போது  பந்து விழும் இடங்களில்  புட் மார்க்ஸ் அதிகமாக இருந்ததால்  சுழற் பந்துவீச்சாளர்களுக்கு  டர்ன் மற்றும் பவுன்ஸ் அதிகமாக கிடைத்தது. இதனை சிறப்பாக பயன்படுத்தி  மெஹதி ஹசன்  ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியின் வெற்றிக்கு  71 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்தன. அஸ்வின் மற்றும் ஐயருக்கு பிறகு பேட்ஸ்மேன்கள் யாருமே இல்லை. இதனை உணர்ந்து பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயாஸ்  ஐயர் மற்றும் அஸ்வின்  நிதானத்துடனும் அதேநேரம்  தங்களது ஏரியாக்களில் விழும்  பந்துகளை  பௌண்டரிகளாக  மாற்றியும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் .

இறுதியாக அஸ்வின்  62 பந்துகளில் 42 ரன்களுடனும்   ஸ்ரேயாஸ் ஐயர் 46 பந்துகளில்  29 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். முதல் இன்னிங்ஸ்  71/4 விக்கெட்டுகள்   இரண்டாவது இன்னிங்ஸில்  42 ரன்கள்  மற்றும் 66/2 எடுத்த  ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .

- Advertisement -

அப்போது பரிசளிப்பு விழாவின் போது பேசிய அவர் ” இந்தப் போட்டி மிகவும் பரபரப்பான ஒன்றாக அமைந்தது. எனக்குப் பின் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாததால் மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடினோம். ஸ்ரேயஸ் அய்யர் மிகவும் அற்புதமாக பேட்டிங்  செய்து என் மீதான அழுத்தத்தை குறைத்தார். அவர் தொடர் நாயகன் வருவதற்கான  பட்டியலில் இடம் பெறவில்லை என்றால் என்னுடைய ஆட்டநாயகன் விருதை  அவருடன் பகிர்ந்து இருப்பேன். அவர் இந்தத் தொடர் முழுவதுமே  மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் என்று கூறினார் அஸ்வின் .

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த தொடர் வெற்றியின் மூலம்  இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் நடைபெற இருக்கின்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான  டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில்  விளையாடுவதற்கான வாய்ப்பை பெறலாம் .