“அஷ்வின் விஸ்வாசம் இல்லாத ஆள்.. சிஎஸ்கே தோனி செய்த நன்றியை மறந்தவர்!” – லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தொடரும் கடுமையான விமர்சனம்!

0
5786
Ashwin

தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் வலது கை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து அவர் தற்பொழுது இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி போட்டிகளில் விளையாட காத்திருக்கிறார்.

முதலில் அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் தரப்படவில்லை. அப்பொழுது அவருக்கு இந்திய அணியில் கட்டாயம் இடம் தர வேண்டும் என்று வெளியில் இருந்து நிறைய குரல்கள் எழுந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அக்சர் படேல் காயம் அடைந்த காரணத்தினால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் தரப்பட்டு இருக்கிறது. தற்பொழுது இடம் தரப்பட்ட பிறகு வேறு விதமான பிரச்சினைகள் வெளியில் இருந்து உருவாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட்டின் மிக மூத்த சுழற் பந்து பேச்சாளரான முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் டிவிட்டரில் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து மிகக் கடுமையான தாக்குதலை கொடுத்து வருகிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடுகளத்தை தனக்கேற்றவாறு மாற்றுமாறு ஆடுகள ஊழியர்களிடம் போய் சொல்லுவார், இதை நான் பார்த்திருக்கிறேன், அவருக்காக தயாரிக்கப்படும் ஆடுகளத்தில் முட்டாள் கூட விக்கெட் எடுக்கலாம், இதன் காரணமாகவே இந்திய பேட்ஸ்மேன்களால் சுழற் பந்துவீச்சை நன்றாக விளையாட முடியவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து மேலும் அவர் எழுதுகையில் ” சிஎஸ்கே மற்றும் தோனி இல்லாமல் இருந்திருந்தால், ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி வந்த அந்த நேரத்தில், அஸ்வின் தன் வாய்ப்புக்காக நீண்ட நேரம் காத்திருந்திருக்க வேண்டும்.

இந்திய அணியில் இவர்களால்தான் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகு அஸ்வின் இந்தியா சிமெண்ட்ஸ் அணியை விட்டு, அவர்களின் போட்டி நிறுவன அணியான கெம்ப்லாஸ்ட்க்கு விளையாடினார்.

அந்தப் பெரிய மனிதரிடமிருந்து என்ன ஒரு விசுவாசம். நீங்கள் அவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும். ஒரு வெள்ளைப்பந்து தொடர் முழுக்க லெக் ஸ்பின்னர்கள் மட்டுமே அஸ்வினுக்காக விளையாட வைக்கப்பட்டார்கள். இல்லையென்றால் எப்போவோ தூக்கி வீசி இருப்பார்கள்!” என்று கூறியிருக்கிறார்!