அஸ்வினிடம் நம்பிக்கையே இல்லை அவர் முகத்தை மூடிக் கொள்கிறார்; கபில்தேவ் அதிரடி தாக்கு!

0
7762
Kapil Dev

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றை எட்டி இருக்கிறது. முதல் சுற்றில் ஐந்து ஆட்டங்களில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்று, தனது குழுவில் முதலிடம் பிடித்து, மற்றொரு குழுவில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணி உடன் வருகின்ற வியாழக்கிழமை அடிலைடு மைதானத்தில் மோதுகிறது!

இந்த டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின், அக்சர், சாகல் மற்றும் பகுதிநேர சுழற் பந்துவீச்சாளராக தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றார்கள்!

- Advertisement -

இதில் இடதுகை சுழற் பந்துவீச்சாளர் அக்சர் படேல் மற்றும் வலது கை சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் மட்டுமே தொடர்ந்து ஆடும் அணியில் இடம் பெற்று வருகிறார்கள். இவர்கள் இருவரும் இடது மற்றும் வலது கை என இருப்பதால், மேலும் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்களாக இருப்பதால் அணியில் இடம் கிடைக்கிறது.

ஆஸ்திரேலிய பெரிய மைதானங்களில் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. இதனால் இந்திய அணியின் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் சாகல் இந்திய ஆடும் அணியில் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் இடம் பெற்று வருகிறார்!

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் உலகக்கோப்பை வெற்றியாளருமான கபில்தேவ் கூறுகையில் ” இதுவரையில் அஸ்வின் எனக்கு நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. அவர் இன்று விக்கட்டுகளை எடுத்தார் ஆனால் அவர் அந்த விக்கட்டுகளை எடுத்தது போல் தெரியவில்லை. அஸ்வினே நம்ப முடியாத வகையில் பேட்ஸ்மேன்கள் விக்கட்டை கொடுத்தார்கள் என்பது போலத்தான் இருந்தது. அப்படியான பாவத்தில் முகத்தை மூடிக்கொண்டிருந்தார் அஸ்வின். விக்கட்டுகளை எடுப்பது நம்பிக்கையை தான் அதிகரிக்கும். நாம் இப்படிப்பட்ட அஸ்வினை இதுவரை பார்த்தது இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய கபில்தேவ் “அவர் தொடர்ந்து இடம் பெற வேண்டுமா என்பது அணி நிர்வாகத்தின் முடிவை பொருத்தது. அவர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால் அது நல்லதுதான். அவர் இதுவரை எல்லா போட்டிகளிலும் ஆடி இருக்கிறார். ஏதாவது சரி செய்ய வேண்டுமென்றால் அவரால் சரி செய்து கொள்ள முடியும். ஆனால் எதிரணியை ஆச்சரியப்படுத்த விரும்பினால், இந்திய அணி நிர்வாகம் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளரிடம் திரும்பலாம். இந்திய அணியின் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர் சாகல் அணி நிர்வாகம் மற்றும் கேப்டனின் நம்பிக்கையைப் பெற்றவர்” என்று கூறியுள்ளார்!