என்ன பெர்பார்மன்ஸ் கொடுத்தாலும் அஸ்வினும் ஜடேஜாவும் தான் ஃபர்ஸ்ட் – இளம் வீரர்களுக்காக முகம்மது கைப் கோரிக்கை

0
236
ravidra jadeja ashwin kudeep

முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியை தொடர்ந்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது . இந்திய அணியின் பங்களாதேஷிற்கு எதிரான இந்த டெஸ்ட் வெற்றிக்கு சுழற் பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இரண்டாவது இன்னிங்ஸிலும் முக்கியமான நேரத்தில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

அக்சர் பட்டேலும் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் . கடந்த சில டெஸ்ட் தொடர்களாகவே இந்திய அணியின் பிரதான ஸ்பின்னரான ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெறாத சூழலில் அக்சர் பட்டேல் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார். காயத்திற்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள குல்தீப் யாதவ் நல்ல முறையில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு பயன்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

காயத்திற்கு பின் பார்மை இழந்த தடுமாறிய இவர் தனது பந்துவீச்சில் சில மாற்றங்களை செய்து கொண்டு அணியில் மீண்டும் இடம் பிடித்தார் . பங்களாதேஷிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் மட்டுமே இடம் பெற்ற இவர் முதல் டெஸ்ட் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி ஆட்டநாயகன் விருது பெற்றார் .

அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய டெஸ்ட் அணியை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பிரதான ஸ்பின்னர்களாக பார்க்கப்படுகின்றனர் . இவர்களது டேட்டிங்கும் ஒரு பிளஸ் பாயிண்டாக இருந்தாலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டு அக்சர் மற்றும் குல்தீப் போன்ற இளம் பந்துவீச்சாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து பேசி உள்ள கைஃப் ” கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தபோது குல்தீபுக்கு விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனமுடைந்து இருந்தார் . அவரது ஒரு நாள் போட்டி மற்றும் டி20 பார்ம் அவரிடமிருந்து போயிருந்தது இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்து ஒரு ஆட்டநாயகன் வருகை பெற்று இருப்பதன் மூலம் அவர் இழந்த நம்பிக்கை அவருக்கு கிடைத்திருக்கிறது”என்று கூறினார் .

- Advertisement -

தொடர்ந்து பேசிய கைஃப் “இந்த ஆட்டமானது அவருக்கு இந்திய அணியில் நிரந்தர இடத்தை பெற்று தரும் என்று உறுதியாக கூற முடியாது . ரவீந்திர ஜடேஜா முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்பும் பட்சத்தில் இந்திய அணி அஸ்வின் மற்றும் ஜடேஜா உடன் தான் களமிறங்கும் . இதனால் குல்தீப்பின் இடம் அணியில் இன்னும் சந்தேகமாக தான் உள்ளது . இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களுடன் களம்பிறங்கும் போது இவருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம்”
என்றும் கூறினார்,

ஆனாலும் தொடர்ந்து அணிக்காக சிறப்பான பந்துவீச்சை கொடுப்பதன் மூலம் அணியில் மூன்றாவது பந்துவீச்சாளருக்கான தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் . இந்திய அணி நிர்வாகம் அஸ்வின்,ரவீந்திர ஜடேஜா ஆகியோரை மட்டுமே நம்பியிருக்காமல் குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்களுக்கும் அணியில் அடிக்கடி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி முடித்தார்.